தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; [QE][QS2]உமக்கே நான் துதி பாடுவேன். [QE]
2. [QS]நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; [QE][QS2]நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? [QE][PBR] [QS]நான் குற்றமற்ற இருதயத்துடன் [QE][QS2]என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். [QE]
3. [QS]தீங்கான செயல்களை [QE][QS2]நான் என் கண்முன் வைக்கமாட்டேன். [QE][PBR] [QS]உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; [QE][QS2]அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. [QE]
4. [QS]வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; [QE][QS2]நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். [QE][PBR]
5. [QS]தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை [QE][QS2]நான் தண்டிப்பேன்; [QE][QS]கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை [QE][QS2]நான் சகிக்கமாட்டேன். [QE][PBR]
6. [QS]நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், [QE][QS2]அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; [QE][QS]குற்றமற்றவனாய் நடப்பவர்களே [QE][QS2]எனக்கு ஊழியம் செய்வார்கள். [QE][PBR]
7. [QS]வஞ்சனை செய்யும் யாரும் [QE][QS2]என் வீட்டில் வாழமாட்டார்கள்; [QE][QS]பொய்ப் பேசுபவர் யாரும் [QE][QS2]என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். [QE][PBR]
8. [QS]நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் [QE][QS2]காலைதோறும் தண்டிப்பேன்; [QE][QS]தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் [QE][QS2]யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 101 / 150
1 யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; உமக்கே நான் துதி பாடுவேன். 2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். 3 தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. 4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். 5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை நான் தண்டிப்பேன்; கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை நான் சகிக்கமாட்டேன். 6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள். 7 வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். 8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் காலைதோறும் தண்டிப்பேன்; தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 101 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References