1. பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள். [QBR2]
2. மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், [QBR2] மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள். [QBR]
3. யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். [QBR2] அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; [QBR2] நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4. அவருடைய வாசல்களில் நன்றியோடும், [QBR2] அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் [QBR2] அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள். [QBR]
5. யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; [QBR2] அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது. [PE]