1. [QS]யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? [QE][QS2]துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்? [QE][PBR]
2. [QS]கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; [QE][QS2]அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். [QE]
3. [QS]அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; [QE][QS2]அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான். [QE]
4. [QS]கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; [QE][QS2]அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை. [QE]
5. [QS]அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; [QE][QS2]உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்; [QE][QS2]தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான். [QE]
6. [QS]அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, [QE][QS2]எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான். [QE][PBR]
7. [QS]அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; [QE][QS2]அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன. [QE]
8. [QS]அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; [QE][QS2]பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான். [QE][QS]திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து, [QE]
[QS2]9. பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். [QE][QS]அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்; [QE][QS2]அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான். [QE]
10. [QS]அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்; [QE][QS2]அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள். [QE]
11. [QS]“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்; [QE][QS2]அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை” [QE][QS2]என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். [QE][PBR]
12. [QS]யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; [QE][QS2]ஆதரவற்றோரை மறவாதிரும். [QE]
13. [QS]கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்? [QE][QS2]“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று [QE][QS2]அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்? [QE]
14. [QS]ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்; [QE][QS2]நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து, [QE][QS2]அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர். [QE][QS]பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்; [QE][QS2]திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர். [QE]
15. [QS]கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். [QE][QS2]தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும். [QE][QS2]இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது. [QE][PBR]
16. [QS]யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்; [QE][QS2]அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள். [QE]
17. [QS]யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்; [QE][QS2]அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார். [QE]
18. [QS]பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும் [QE][QS2]மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி, [QE][QS2]நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர். [QE]