1. {#1ஞானம் மற்றும் முட்டாள்தனத்தின் அழைப்பு } [QS]ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, [QE][QS2]அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது. [QE]
2. [QS]ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; [QE][QS2]அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது. [QE]
3. [QS]தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, [QE][QS2]பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது, [QE]
[QS2]4. “அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” [QE][QS]பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது, [QE]
[QS2]5. “வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு [QE][QS2]நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள். [QE]
6. [QS]நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; [QE][QS2]மெய்யறிவின் வழியில் நடங்கள்.” [QE][PBR]
7. [QS]ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்; [QE][QS2]கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள். [QE]
8. [QS]ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்; [QE][QS2]ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள். [QE]
9. [QS]ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்; [QE][QS2]நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள். [QE][PBR]
10. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், [QE][QS2]பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல். [QE]
11. [QS]ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும், [QE][QS2]உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும். [QE]
12. [QS]நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்; [QE][QS2]நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய். [QE][PBR]
13. [QS]மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது; [QE][QS2]அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள். [QE]
14. [QS]அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள், [QE][QS2]பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள். [QE]
15. [QS]அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில் [QE][QS2]நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு, [QE]
[QS2]16. “அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” [QE][QS]பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள், [QE]
[QS2]17. “திருட்டுத்தண்ணீர் இனிமையானது; [QE][QS2]இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!” [QE]
18. [QS]ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், [QE][QS2]அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். [QE]