1. {#1விபசாரியைக் குறித்த எச்சரிக்கை } [QS]என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், [QE][QS2]என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள். [QE]
2. [QS]என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; [QE][QS2]என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள். [QE]
3. [QS]அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, [QE][QS2]இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். [QE]
4. [QS]ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், [QE][QS2]மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல். [QE]
5. [QS]அவை உன்னை விபசாரியிடமிருந்தும், [QE][QS2]மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும். [QE][PBR]
6. [QS]நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று [QE][QS2]திரை வழியேப் பார்த்தேன். [QE]
7. [QS]அப்பொழுது அறிவில்லாத [QE][QS2]இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற [QE][QS2]ஒரு வாலிபனைக் கண்டேன். [QE]
8. [QS]அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, [QE][QS2]அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான். [QE]
9. [QS]அது பொழுதுபட்டு மாலைமங்கி [QE][QS2]இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது. [QE][PBR]
10. [QS]அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய், [QE][QS2]தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். [QE]
11. [QS]அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; [QE][QS2]அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை. [QE]
12. [QS]அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள், [QE][QS2]மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள். [QE]
13. [QS]அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, [QE][QS2]நாணமில்லாத முகத்துடனே அவனிடம்: [QE][PBR]
14. [QS]“நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி, [QE][QS2]இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன். [QE]
15. [QS]அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்; [QE][QS2]நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன். [QE]
16. [QS]நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து [QE][QS2]எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன். [QE]
17. [QS]நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், [QE][QS2]இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன். [QE]
18. [QS]வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; [QE][QS2]நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்! [QE]
19. [QS]எனது கணவன் வீட்டில் இல்லை; [QE][QS2]அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான். [QE]
20. [QS]அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், [QE][QS2]அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள். [QE][PBR]
21. [QS]இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, [QE][QS2]அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள். [QE]
22. [QS]உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; [QE][QS2]வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் [QE][QS]வலையில் விழப்போகும் மானைப்போலவும் [QE]
[QS2]23. தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; [QE][QS]அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து [QE][QS2]உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான். [QE][PBR]
24. [QS]ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS2]நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். [QE]
25. [QS]உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்; [QE][QS2]அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள். [QE]
26. [QS]அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்; [QE][QS2]அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம். [QE]
27. [QS]அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; [QE][QS2]அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. [QE]