1. {#1மூடத்தனத்தைக் குறித்து எச்சரிக்கை } [QS]என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், [QE][QS2]நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால், [QE]
2. [QS]நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், [QE][QS2]உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய். [QE]
3. [QS]என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், [QE][QS2]நீ உன்னை விடுவித்துக்கொள்ள [QE][QS]நீ போய் உன்னைத் தாழ்த்தி, [QE][QS2]உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள். [QE]
4. [QS]அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், [QE][QS2]உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே. [QE]
5. [QS]வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, [QE][QS2]வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு. [QE][PBR]
6. [QS]சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், [QE][QS2]அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு! [QE]
7. [QS]அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, [QE][QS2]அதிகாரியோ இல்லை. [QE]
8. [QS]அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, [QE][QS2]அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது. [QE][PBR]
9. [QS]சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? [QE][QS2]நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்? [QE]
10. [QS]கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், [QE][QS2]கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், [QE]
11. [QS]வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; [QE][QS2]பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும். [QE][PBR]
12. [QS]வீணனும் கயவனுமானவன், [QE][QS2]வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான். [QE]
[QS2]13. அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, [QE][QS2]தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, [QE][QS2]தனது விரல்களால் சைகை காட்டுகிறான். [QE]
[QS2]14. அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; [QE][QS2]அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான். [QE]
15. [QS]அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; [QE][QS2]மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான். [QE][PBR]
16. [LS] யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, [LE][LS2]இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது: [LE]
17. [LS3] கர்வமுள்ள கண்கள், [LE][LS3]பொய்பேசும் நாவு, [LE][LS3]குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள், [LE]
18. [LS3] கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், [LE][LS3]தீமைசெய்ய விரையும் கால்கள், [LE]
19. [LS3] பொய்ச்சாட்சி, [LE][LS3]சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர். [LE]
20. {#1விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை } [QS]என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், [QE][QS2]உன் தாயின் போதனையை விட்டுவிடாதே. [QE]
21. [QS]அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; [QE][QS2]அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள். [QE]
22. [QS]நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; [QE][QS2]நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்; [QE][QS2]நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும். [QE]
23. [QS]ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, [QE][QS2]இந்த போதனை ஒரு வெளிச்சம், [QE][QS]நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் [QE][QS2]வாழ்வுக்கு வழி. [QE]
24. [QS]இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், [QE][QS2]விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும். [QE][PBR]
25. [QS]நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; [QE][QS2]அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே. [QE][PBR]
26. [QS]ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; [QE][QS2]பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள். [QE]
27. [QS]ஒருவன் தன் உடைகள் எரியாமல் [QE][QS2]தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ? [QE]
28. [QS]அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, [QE][QS2]ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ? [QE]
29. [QS]அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; [QE][QS2]அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான். [QE][PBR]
30. [QS]ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, [QE][QS2]தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை. [QE]
31. [QS]ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; [QE][QS2]அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும். [QE]
32. [QS]ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; [QE][QS2]அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். [QE]
33. [QS]அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; [QE][QS2]அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது. [QE][PBR]
34. [QS]ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; [QE][QS2]பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான். [QE]
35. [QS]அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; [QE][QS2]எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான். [QE]