1. {#1விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை } [QS]என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், [QE][QS2]எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள். [QE]
2. [QS]அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; [QE][QS2]உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும். [QE]
3. [QS]ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், [QE][QS2]அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்; [QE]
4. [QS]ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், [QE][QS2]இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள். [QE]
5. [QS]அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; [QE][QS2]அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. [QE]
6. [QS]அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, [QE][QS2]அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள். [QE][PBR]
7. [QS]ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS2]நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம். [QE]
8. [QS]அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், [QE][QS2]அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம். [QE]
9. [QS]இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் [QE][QS2]உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்; [QE]
10. [QS]வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், [QE][QS2]உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும். [QE]
11. [QS]உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், [QE][QS2]உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள். [QE]
12. [QS]அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, [QE][QS2]திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே! [QE]
13. [QS]நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, [QE][QS2]எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே. [QE]
14. [QS]நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் [QE][QS2]தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள். [QE][PBR]
15. [QS]நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, [QE][QS2]நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு. [QE]
16. [QS]உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? [QE][QS2]உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ? [QE]
17. [QS]அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், [QE][QS2]அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. [QE]
18. [QS]உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, [QE][QS2]நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக. [QE]
19. [QS]அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, [QE][QS2]அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; [QE][QS2]அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக. [QE]
20. [QS]என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? [QE][QS2]இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்? [QE][PBR]
21. [QS]மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, [QE][QS2]அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார். [QE]
22. [QS]கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; [QE][QS2]அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன. [QE]
23. [QS]அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், [QE][QS2]அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள். [QE]