1. {#1ஞானமே மேலானது } [QS]பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; [QE][QS2]கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். [QE]
2. [QS]நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், [QE][QS2]எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள். [QE]
3. [QS]நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், [QE][QS2]என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன். [QE]
4. [QS]அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: [QE][QS2]“நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; [QE][QS2]நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய். [QE]
5. [QS]ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; [QE][QS2]எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு. [QE]
6. [QS]நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; [QE][QS2]அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும். [QE]
7. [QS]ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS2]உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள். [QE]
8. [QS]நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; [QE][QS2]நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும். [QE]
9. [QS]அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், [QE][QS2]அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.” [QE][PBR]
10. [QS]என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; [QE][QS2]அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும். [QE]
11. [QS]நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, [QE][QS2]நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன். [QE]
12. [QS]நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; [QE][QS2]நீ ஓடும்போது இடறி விழமாட்டாய். [QE]
13. [QS]அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; [QE][QS2]அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு. [QE]
14. [QS]கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; [QE][QS2]தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே. [QE]
15. [QS]அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; [QE][QS2]அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல். [QE]
16. [QS]ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; [QE][QS2]யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள். [QE]
17. [QS]அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, [QE][QS2]வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள். [QE][PBR]
18. [QS]நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் [QE][QS2]மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது. [QE]
19. [QS]ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; [QE][QS2]அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள். [QE][PBR]
20. [QS]என் மகனே, நான் சொல்வதைக் கவனி; [QE][QS2]நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு. [QE]
21. [QS]அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, [QE][QS2]அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்; [QE]
22. [QS]அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; [QE][QS2]அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும். [QE]
23. [QS]எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், [QE][QS2]அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும். [QE]
24. [QS]வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, [QE][QS2]சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு. [QE]
25. [QS]உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; [QE][QS2]உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து. [QE]
26. [QS]உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; [QE][QS2]அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும். [QE]
27. [QS]நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; [QE][QS2]உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள். [QE]