1. [PS]யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. [PE][QS]அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது: [QE][PBR] [QS]“இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன், [QE][QS2]ஆனால் நான் வெற்றிபெற முடியும். [QE]
2. [QS]நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; [QE][QS2]ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை. [QE]
3. [QS]நான் ஞானத்தைக் கற்கவில்லை, [QE][QS2]பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை. [QE]
4. [QS]மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? [QE][QS2]தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்? [QE][QS]வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்? [QE][QS2]பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்? [QE][QS]அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன? [QE][QS2]உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். [QE][PBR] [PBR]
5. [QS]“இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; [QE][QS2]அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர். [QE]
6. [QS]அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, [QE][QS2]கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார். [QE][PBR]
7. [QS]“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; [QE][QS2]நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும். [QE]
8. [QS]மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; [QE][QS2]எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம், [QE][QS2]ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும். [QE]
9. [QS]இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு [QE][QS2]‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்; [QE][QS]அல்லது நான் ஏழையாகி, திருடி [QE][QS2]என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும். [QE][PBR]
10. [QS]“வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; [QE][QS2]அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய். [QE][PBR]
11. [QS]“தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், [QE][QS2]தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு; [QE]
12. [QS]தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், [QE][QS2]தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு; [QE]
13. [QS]எப்பொழுதும் கண்களில் பெருமையும் [QE][QS2]ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு; [QE]
14. [QS]கூர்மையான வாள் போன்ற பற்களையும் [QE][QS2]தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு; [QE][QS]அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும், [QE][QS2]மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள். [QE][PBR]
15. [QS]“இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர். [QE][PBR] [LS]“ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, [LE][LS2]‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு: [LE]
16. [LS3] பாதாளம், [LE][LS3]மலட்டுக் கருப்பை, [LE][LS3]தண்ணீரால் திருப்தியடையாத நிலம், [LE][LS3]ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. [LE][PBR]
17. [QS]“தன் தந்தையை ஏளனம் செய்து, [QE][QS2]தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை [QE][QS]பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும், [QE][QS2]கழுகுகள் அவற்றைத் தின்னும். [QE][PBR]
18. [LS] “எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, [LE][LS2]நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை: [LE]
19. [LS3] ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், [LE][LS3]பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும், [LE][LS3]நடுக்கடலிலே கப்பலின் வழியும், [LE][LS3]இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை. [LE][PBR]
20. [QS]“ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: [QE][QS2]அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு, [QE][QS2]‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள். [QE][PBR]
21. [LS] “மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, [LE][LS2]நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை: [LE]
22. [LS3] அரசனாகிவிடும் வேலைக்காரன், [LE][LS3]மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும், [LE]
23. [LS3] யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், [LE][LS3]தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே. [LE][PBR]
24. [LS] “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, [LE][LS2]ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: [LE]
25. [LS2] எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; [LE][LS3]ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; [LE]
26. [LS2] குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; [LE][LS3]ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. [LE]
27. [LS2] வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, [LE][LS3]ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; [LE]
28. [LS2] பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், [LE][LS3]ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது. [LE][PBR]
29. [LS] “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, [LE][LS2]கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு: [LE]
30. [LS3] மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; [LE]
31. [LS3] கர்வத்துடன் நடக்கும் சேவல், [LE][LS3]வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; [LE][LS3]தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே. [LE][PBR]
32. [QS]“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், [QE][QS2]அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால், [QE][QS2]உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்! [QE]
33. [QS]பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், [QE][QS2]மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும், [QE][QS2]கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.” [QE]