1. யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. [QBR] அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது: “இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன், [QBR2] ஆனால் நான் வெற்றிபெற முடியும். [QBR]
2. நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; [QBR2] ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை. [QBR]
3. நான் ஞானத்தைக் கற்கவில்லை, [QBR2] பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை. [QBR]
4. மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? [QBR2] தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்? [QBR] வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்? [QBR2] பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்? [QBR] அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன? [QBR2] உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
5. “இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; [QBR2] அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர். [QBR]
6. அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, [QBR2] கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார்.
7. “யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; [QBR2] நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும். [QBR]
8. மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; [QBR2] எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம், [QBR2] ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும். [QBR]
9. இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு [QBR2] ‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்; [QBR] அல்லது நான் ஏழையாகி, திருடி [QBR2] என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும்.
10. “வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; [QBR2] அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய்.
11. “தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், [QBR2] தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு; [QBR]
12. தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், [QBR2] தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு; [QBR]
13. எப்பொழுதும் கண்களில் பெருமையும் [QBR2] ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு; [QBR]
14. கூர்மையான வாள் போன்ற பற்களையும் [QBR2] தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு; [QBR] அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும், [QBR2] மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள்.
15. “இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். [QBR2] அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர். “ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, ‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு:
16. பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.
17. “தன் தந்தையை ஏளனம் செய்து, [QBR2] தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை [QBR] பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும், [QBR2] கழுகுகள் அவற்றைத் தின்னும்.
18. “எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை:
19. ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும், நடுக்கடலிலே கப்பலின் வழியும், இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை.
20. “ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: [QBR2] அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு, [QBR2] ‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள்.
21. “மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை:
22. அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,
23. யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.
24. “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை:
25. எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;
26. குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன.
27. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன;
28. பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.
29. “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு:
30. மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை;
31. கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.
32. “நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், [QBR2] அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால், [QBR2] உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்! [QBR]
33. பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், [QBR2] மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும், [QBR2] கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.” [PE]