1. {#1ஞானம் நல்வாழ்வை அளிக்கிறது } [QS]என் மகனே, என் போதனைகளை மறவாதே, [QE][QS2]என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள். [QE]
2. [QS]அவை உனக்கு நீண்ட ஆயுளையும், [QE][QS2]சமாதான வாழ்வையும் கொண்டுவரும். [QE][PBR]
3. [QS]அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; [QE][QS2]அவற்றை உன் கழுத்திலே அணிந்து, [QE][QS2]உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். [QE]
4. [QS]அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் [QE][QS2]மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய். [QE][PBR]
5. [QS]உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, [QE][QS2]உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. [QE]
6. [QS]நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, [QE][QS2]அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். [QE][PBR]
7. [QS]உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; [QE][QS2]யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. [QE]
8. [QS]அது உன் உடலுக்கு சுகத்தையும், [QE][QS2]உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். [QE][PBR]
9. [QS]நீ உன் செல்வத்தினாலும், [QE][QS2]உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. [QE]
10. [QS]அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; [QE][QS2]திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். [QE][PBR]
11. [QS]என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; [QE][QS2]அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. [QE]
12. [QS]ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், [QE][QS2]யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். [QE][PBR]
13. [QS]ஞானத்தை அடைகிறவர்களும், [QE][QS2]புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE]
14. [QS]ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, [QE][QS2]தங்கத்தைவிடப் பயனுள்ளது. [QE]
15. [QS]அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; [QE][QS2]நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல. [QE]
16. [QS]அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; [QE][QS2]அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன. [QE]
17. [QS]அதின் வழிகள் இன்பமானது; [QE][QS2]அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை. [QE]
18. [QS]அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், [QE][QS2]அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE][PBR]
19. [QS]யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், [QE][QS2]அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்; [QE]
20. [QS]அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, [QE][QS2]மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின. [QE][PBR]
21. [QS]என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, [QE][QS2]சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள். [QE]
22. [QS]அவை உனக்கு வாழ்வாகவும், [QE][QS2]உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும். [QE]
23. [QS]அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; [QE][QS2]உன் கால்களும் இடறாது. [QE]
24. [QS]நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; [QE][QS2]நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும். [QE]
25. [QS]திடீரென வரும் பேராபத்திற்கும் [QE][QS2]கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம். [QE]
26. [QS]யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; [QE][QS2]அவர் உன் கால் இடறாமல் காப்பார். [QE][PBR]
27. [QS]நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, [QE][QS2]அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. [QE]
28. [QS]உன்னிடம் இருக்கும்போதே, [QE][QS2]உன் அயலவனிடம், [QE][QS2]“போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே. [QE]
29. [QS]உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் [QE][QS2]அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே. [QE]
30. [QS]ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது [QE][QS2]காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே. [QE][PBR]
31. [QS]வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; [QE][QS2]அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே. [QE][PBR]
32. [QS]ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; [QE][QS2]ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார். [QE]
33. [QS]கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், [QE][QS2]ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும். [QE]
34. [QS]பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; [QE][QS2]ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார். [QE]
35. [QS]ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; [QE][QS2]மூடர்கள் வெட்கப்படுவார்கள். [QE]