1. [QS]கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்; [QE][QS2]ஆனால் நீதிமான்கள் சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். [QE][PBR]
2. [QS]நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்; [QE][QS2]ஆனால் விவேகமும் அறிவும் உள்ள ஆட்சியாளர் ஒழுங்கை நிலைநிறுத்துகிறார். [QE][PBR]
3. [QS]ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர், [QE][QS2]விளைச்சல் அனைத்தையும் அழிக்கும் பெருமழையைப் போலிருக்கிறான். [QE][PBR]
4. [QS]சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்; [QE][QS2]ஆனால் அதைக் கைக்கொள்கிறவர்கள் அவர்களை எதிர்க்கிறார்கள். [QE][PBR]
5. [QS]தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; [QE][QS2]ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்கள் அதை முற்றுமாய் விளங்கிக்கொள்கிறார்கள். [QE][PBR]
6. [QS]நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட, [QE][QS2]குற்றமற்ற வழியில் நடக்கும் ஏழைகளே சிறந்தவர்கள். [QE][PBR]
7. [QS]விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; [QE][QS2]ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான். [QE][PBR]
8. [QS]வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள், [QE][QS2]ஏழைகளுக்கு இரங்கும் மற்றவர்களுக்காக அதைச் சேர்க்கிறார்கள். [QE][PBR]
9. [QS]சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் [QE][QS2]இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும். [QE][PBR]
10. [QS]நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள், [QE][QS2]தாங்கள் வைத்த கண்ணிக்குள் தாங்களே அகப்படுவார்கள்; [QE][QS2]ஆனால் குற்றமற்றவர்கள் நன்மையைச் சுதந்தரிப்பார்கள். [QE][PBR]
11. [QS]பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்; [QE][QS2]ஆனால் மெய்யறிவுள்ள ஏழைகளோ, அவர்கள் யார் என்பதை சரியாக அறிந்துகொள்கிறார்கள். [QE][PBR]
12. [QS]நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; [QE][QS2]ஆனால் கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். [QE][PBR]
13. [QS]தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான், [QE][QS2]ஆனால் அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் இரக்கம் பெறுவார்கள். [QE][PBR]
14. [QS]எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QE][QS2]ஆனால் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவர்களோ ஆபத்தில் விழுகிறார்கள். [QE][PBR]
15. [QS]ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன் [QE][QS2]கெர்ச்சிக்கிற சிங்கம் போலவும் பாயும் கரடியைப்போலவும் இருக்கிறான். [QE][PBR]
16. [QS]ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை, [QE][QS2]ஆனால் அநியாய வழியில் சம்பாதிக்கும் ஆதாயத்தை வெறுக்கிறவர்கள் நீடிய வாழ்வை அனுபவிப்பார்கள். [QE][PBR]
17. [QS]கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, [QE][QS2]அவனை கல்லறைக்கு இழுக்கும்; [QE][QS2]யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம். [QE][PBR]
18. [QS]குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், [QE][QS2]ஆனால் தவறான வழியில் நடப்பவர்கள் திடீரென விழுந்துபோவார்கள். [QE][PBR]
19. [QS]தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், [QE][QS2]ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை வீணடிப்பவர்களோ, அதிக வறுமையில் வாடுவார்கள். [QE][PBR]
20. [QS]உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; [QE][QS2]ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். [QE][PBR]
21. [QS]பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல, [QE][QS2]ஆனாலும் சிலர் ஒரு சிறு அப்பத்துண்டிற்காகவும் அநியாயம் செய்வார்கள். [QE][PBR]
22. [QS]பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், [QE][QS2]ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள். [QE][PBR]
23. [QS]தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, [QE][QS2]மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள். [QE][PBR]
24. [QS]தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, [QE][QS2]“அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள் [QE][QS2]அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள். [QE][PBR]
25. [QS]பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; [QE][QS2]ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள். [QE][PBR]
26. [QS]தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். [QE][PBR]
27. [QS]ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை, [QE][QS2]ஆனால் ஏழைகளின் தேவைகளை கவனிக்காதவர்கள் அநேக சாபங்களைப் பெறுவார்கள். [QE][PBR]
28. [QS]கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்; [QE][QS2]ஆனால் கொடியவர்கள் அழியும்போது நீதிமான்கள் பெருகுவார்கள். [QE][PBR]