1. [QS]நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, [QE][QS2]ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே. [QE][PBR]
2. [QS]உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். [QE][QS2]உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும். [QE][PBR]
3. [QS]கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; [QE][QS2]ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும். [QE][PBR]
4. [QS]கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; [QE][QS2]ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது. [QE][PBR]
5. [QS]மறைவான அன்பைவிட, [QE][QS2]வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது. [QE][PBR]
6. [QS]நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், [QE][QS2]ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை. [QE][PBR]
7. [QS]திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; [QE][QS2]பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும். [QE][PBR]
8. [QS]தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே, [QE][QS2]வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள். [QE][PBR]
9. [QS]வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல, [QE][QS2]ஒருவருடைய நண்பரின் அருமை [QE][QS2]இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது. [QE][PBR]
10. [QS]நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே, [QE][QS2]உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே; [QE][QS2]தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல். [QE][PBR]
11. [QS]என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து; [QE][QS2]அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும். [QE][PBR]
12. [QS]விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; [QE][QS2]ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், [QE][QS2]வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள். [QE][PBR]
14. [QS]ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால், [QE][QS2]அது சாபமாகவே எண்ணப்படும். [QE][PBR]
15. [QS]சண்டைக்கார மனைவி, [QE][QS2]மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்; [QE]
16. [QS]அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், [QE][QS2]கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும். [QE][PBR]
17. [QS]இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, [QE][QS2]ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான். [QE][PBR]
18. [QS]அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்; [QE][QS2]தன் எஜமானின் நலன்களைப் பாதுகாப்பவன் மேன்மை பெறுவான். [QE][PBR]
19. [QS]தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, [QE][QS2]ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும். [QE][PBR]
20. [QS]பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; [QE][QS2]அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. [QE][PBR]
21. [QS]வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்; [QE][QS2]ஆனால் மனிதர்களோ அவர்களுக்கு வரும் புகழினால் சோதிக்கப்படுகிறார்கள். [QE][PBR]
22. [QS]தானியத்தை உலக்கையினால் இடிப்பதுபோல, [QE][QS2]மூடரை உரலில் போட்டு இடித்தாலும், [QE][QS2]மூடத்தனத்தை அவர்களிடமிருந்து உன்னால் அகற்றமுடியாது. [QE][PBR]
23. [QS]உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள், [QE][QS2]உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி; [QE]
24. [QS]ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை, [QE][QS2]கிரீடமும் எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைப்பதில்லை. [QE]
25. [QS]காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது, [QE][QS2]குன்றுகளிலிருந்து புல் சேகரிக்கப்படுகின்றது; [QE]
26. [QS]ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும், [QE][QS2]வெள்ளாடுகள் ஒரு வயல் வாங்கப் பணத்தைக் கொடுக்கும். [QE]
27. [QS]உனக்கும் உன் குடும்பத்திற்கும் போதுமான வெள்ளாட்டுப்பால் உன்னிடம் நிறைவாய் இருக்கும், [QE][QS2]அது பணிப்பெண்களின் பிழைப்பிற்கும் போதுமானதாய் இருக்கும். [QE][PBR]