1. [QS]கோடைகாலத்தில் உறைபனியும் [QE][QS2]அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது. [QE]
2. [QS]சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் [QE][QS2]காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது. [QE]
3. [QS]குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், [QE][QS2]மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது. [QE]
4. [QS]மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; [QE][QS2]சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய். [QE]
5. [QS]மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; [QE][QS2]இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். [QE]
6. [QS]மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, [QE][QS2]தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும். [QE]
7. [QS]மூடரின் வாயிலுள்ள பழமொழி, [QE][QS2]பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும். [QE]
8. [QS]மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, [QE][QS2]கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும். [QE]
9. [QS]மூடரின் வாயிலுள்ள பழமொழி, [QE][QS2]குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும். [QE]
10. [QS]மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், [QE][QS2]கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான். [QE]
11. [QS]நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, [QE][QS2]மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள். [QE]
12. [QS]தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? [QE][QS2]அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம். [QE][PBR]
13. [QS]“வீதியிலே சிங்கம் நிற்கிறது, [QE][QS2]ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான். [QE]
14. [QS]ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, [QE][QS2]சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான். [QE]
15. [QS]சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; [QE][QS2]அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள். [QE]
16. [QS]விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, [QE][QS2]சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான். [QE][PBR]
17. [QS]வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், [QE][QS2]தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான். [QE][PBR]
18. [QS]தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் [QE][QS2]எய்கிற பைத்தியக்காரனைப் போலவே, [QE]
19. [QS]தன் அயலானை ஏமாற்றிவிட்டு, [QE][QS2]“நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான். [QE][PBR]
20. [QS]விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, [QE][QS2]புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும். [QE]
21. [QS]தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, [QE][QS2]சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை. [QE]
22. [QS]புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; [QE][QS2]அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். [QE][PBR]
23. [QS]தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, [QE][QS2]மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது. [QE]
24. [QS]தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; [QE][QS2]ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான். [QE]
25. [QS]அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; [QE][QS2]அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது. [QE]
26. [QS]அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், [QE][QS2]அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும். [QE]
27. [QS]ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; [QE][QS2]ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும். [QE]
28. [QS]பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; [QE][QS2]முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும். [QE][PBR]