1. [PS]யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்: [PE]
2. [QS]காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை; [QE][QS2]ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை. [QE]
3. [QS]வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல், [QE][QS2]அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது. [QE][PBR]
4. [QS]வெள்ளியிலிருந்து மாசை அகற்று, [QE][QS2]அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்; [QE]
5. [QS]அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று; [QE][QS2]அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும். [QE][PBR]
6. [QS]அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, [QE][QS2]பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே; [QE]
7. [QS]அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட, [QE][QS2]“நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது. [QE][PBR] [QS]நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல, [QE]
[QS2]8. அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே; [QE][QS]முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி [QE][QS2]உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்? [QE][PBR]
9. [QS]அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது, [QE][QS2]நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே; [QE]
10. [QS]அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான், [QE][QS2]உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது. [QE][PBR]
11. [QS]ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, [QE][QS2]வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது. [QE]
12. [QS]ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு [QE][QS2]அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது. [QE][PBR]
13. [QS]நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு [QE][QS2]அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்; [QE][QS2]அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான். [QE]
14. [QS]தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன், [QE][QS2]மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான். [QE][PBR]
15. [QS]பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம், [QE][QS2]சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும். [QE][PBR]
16. [QS]நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு; [QE][QS2]அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய். [QE]
17. [QS]நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; [QE][QS2]அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள். [QE][PBR]
18. [QS]தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், [QE][QS2]வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான். [QE]
19. [QS]துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, [QE][QS2]வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும். [QE]
20. [QS]இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, [QE][QS2]குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும், [QE][QS2]காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும். [QE][PBR]
21. [QS]உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; [QE][QS2]அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு. [QE]
22. [QS]அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; [QE][QS2]யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார். [QE][PBR]
23. [QS]வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, [QE][QS2]வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும். [QE][PBR]
24. [QS]சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, [QE][QS2]கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. [QE][PBR]
25. [QS]தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி, [QE][QS2]களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும். [QE]
26. [QS]கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான், [QE][QS2]சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான். [QE][PBR]
27. [QS]தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல, [QE][QS2]தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல. [QE][PBR]
28. [QS]தன்னடக்கம் இல்லாத மனிதன் [QE][QS2]மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான். [QE]