1. கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; [QBR2] அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே. [QBR]
2. ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, [QBR2] அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும். பழமொழி 21
3. ஞானத்தால் வீடு கட்டப்பட்டு [QBR2] புரிந்துகொள்ளுதலினால் அது நிலைநாட்டப்படுகிறது; [QBR]
4. அறிவினால் அதின் அறைகள், [QBR2] அபூர்வமான அழகிய பொருட்களால் நிரப்பப்படுகின்றன. பழமொழி 22
5. ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன், [QBR2] அறிவுள்ளவன் தன் பெலத்தை பெருக்குகிறான். [QBR]
6. போர் செய்ய வழிநடத்துதல் தேவை, [QBR2] வெற்றிபெற அநேக ஆலோசகர்கள் தேவை. பழமொழி 23
7. ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது; [QBR2] பட்டண வாசலில் கூடும் சபையில் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றும் இல்லை. பழமொழி 24
8. தீமையான சூழ்ச்சி செய்பவன் [QBR2] சதிகாரன் என அழைக்கப்படுவான். [QBR]
9. மூடரின் திட்டங்கள் பாவமாகும், [QBR2] ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள். பழமொழி 25
10. துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால், [QBR2] உன் பெலன் எவ்வளவு குறைவானது. [QBR]
11. மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி; [QBR2] கொல்லப்பட களத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறவர்களைக் காப்பாற்று. [QBR]
12. “எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால், [QBR2] இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற இறைவன் அதைக் காணமாட்டாரோ? [QBR] உங்கள் வாழ்வைக் காக்கிறவர் அதை அறியாமலிருப்பாரோ? [QBR2] ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்வதற்குத் தக்கதாய் அவர் பதில்செய்யாமல் விடுவாரோ? பழமொழி 26
13. என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; [QBR2] கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும். [QBR]
14. அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்: [QBR2] அதை நீ தெரிந்துகொண்டால் உனக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, [QBR2] உன் எதிர்பார்ப்பு வீண்போகாது. பழமொழி 27
15. நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே; [QBR2] அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்காதே. [QBR]
16. ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்; [QBR2] ஆனால் கொடியவர்களோ பேராபத்தினால் வீழ்த்தப்படுவார்கள். பழமொழி 28
17. உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; [QBR2] அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே. [QBR]
18. நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு [QBR2] அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார். பழமொழி 29
19. தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, [QBR2] கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. [QBR]
20. ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; [QBR2] கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும். பழமொழி 30
21. என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, [QBR2] கலகக்காரர்களுடன் நீ சேராதே. [QBR]
22. ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், [QBR2] யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் [PE][PS]
23. ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்: [QBR] நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல: [QBR]
24. குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள், [QBR2] நாடுகள் அனைத்தும் அவனை வெறுப்பார்கள். [QBR]
25. ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், [QBR2] அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும்.
26. நேர்மையான பதில் [QBR2] உதடுகளில் கொடுக்கும் முத்தத்தைப் போலிருக்கும்.
27. உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி, [QBR2] உன் வயல்வெளிகளை ஆயத்தப்படுத்து; [QBR2] அதின்பின், உனது வீட்டைக் கட்டு.
28. காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; [QBR2] பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா? [QBR]
29. “அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ, [QBR2] “அவன் செய்ததற்குத் தக்கதாக நானும் அவனைத் தண்டிப்பேன்” என்றோ நீ ஒருபோதும் சொல்லாதே.
30. நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; [QBR2] புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்; [QBR]
31. அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; [QBR2] தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன, [QBR2] தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது. [QBR]
32. நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்; [QBR2] அப்பொழுது நான் கண்டதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: [QBR]
33. கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், [QBR2] கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், [QBR]
34. வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; [QBR2] பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும். [PE]