1. அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; [QBR2] வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.
2. பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; [QBR2] இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை.
3. விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; [QBR2] ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
4. யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, [QBR2] செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது.
5. கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; [QBR2] ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள்.
6. பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; [QBR2] அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள்.
7. பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள், [QBR2] கடன்வாங்கினவர்கள் கடன் கொடுத்தவருக்கு அடிமை.
8. அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், [QBR2] அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும்.
9. தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; [QBR2] ஏனெனில் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
10. ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; [QBR2] வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும்.
11. தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும் [QBR2] அரசனைத் தங்கள் நண்பனாக்கிக் கொள்வார்கள்.
12. யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, [QBR2] ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார்.
13. “வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” [QBR2] என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான்.
14. விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; [QBR2] யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.
15. பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது, [QBR2] ஆனால் கண்டித்துத் திருத்துவதால் அதை அகற்றலாம்.
16. தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும், [QBR2] செல்வந்தர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறவர்களும் ஏழையாகிறார்கள். ஞானிகளின் முப்பது பழமொழிகள் பழமொழி 1
17. ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், [QBR2] நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை. [QBR]
18. ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, [QBR2] அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள். [QBR]
19. உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே [QBR2] இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன். [QBR]
20. அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான [QBR2] முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா? [QBR]
21. அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; [QBR2] எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு [QBR2] தகுந்த பதிலைக் கொடுக்கலாம். பழமொழி 2
22. ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; [QBR2] அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. [QBR]
23. ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, [QBR2] அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். பழமொழி 3
24. கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, [QBR2] கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே. [QBR]
25. ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, [QBR2] உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம். பழமொழி 4
26. பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; [QBR2] மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே. [QBR]
27. ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், [QBR2] உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும். பழமொழி 5
28. உன் முற்பிதாக்கள் நாட்டிய [QBR2] பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே. பழமொழி 6
29. தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா? [QBR2] அவர்கள் அரசர்களுக்குமுன் பணிசெய்வார்கள்; [QBR2] அவர்கள் பிரபலமற்றவர்களுக்கு முன்பாக பணிசெய்வதில்லை. [PE]