1. [QS]திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; [QE][QS2]அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல. [QE][PBR]
2. [QS]அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; [QE][QS2]அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள். [QE][PBR]
3. [QS]சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; [QE][QS2]ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர். [QE][PBR]
4. [QS]சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; [QE][QS2]அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை. [QE][PBR]
5. [QS]மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; [QE][QS2]மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள். [QE][PBR]
6. [QS]அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; [QE][QS2]ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்? [QE][PBR]
7. [QS]நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; [QE][QS2]அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE][PBR]
8. [QS]நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, [QE][QS2]அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான். [QE][PBR]
9. [QS]“நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; [QE][QS2]நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்? [QE][PBR]
10. [QS]பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் [QE][QS2]ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார். [QE][PBR]
11. [QS]சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை [QE][QS2]தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். [QE][PBR]
12. [QS]கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் [QE][QS2]ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். [QE][PBR]
13. [QS]தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; [QE][QS2]விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். [QE][PBR]
14. [QS]பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; [QE][QS2]வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். [QE][PBR]
15. [QS]தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; [QE][QS2]ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல். [QE][PBR]
16. [QS]பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; [QE][QS2]வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள். [QE][PBR]
17. [QS]மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; [QE][QS2]ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும். [QE][PBR]
18. [QS]நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; [QE][QS2]ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள். [QE][PBR]
19. [QS]புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; [QE][QS2]ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு. [QE][PBR]
20. [QS]ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், [QE][QS2]கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும். [QE][PBR]
21. [QS]ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, [QE][QS2]முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது. [QE][PBR]
22. [QS]“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; [QE][QS2]யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார். [QE][PBR]
23. [QS]போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; [QE][QS2]போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல. [QE][PBR]
24. [QS]மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; [QE][QS2]அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? [QE][PBR]
25. [QS]முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, [QE][QS2]பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும். [QE][PBR]
26. [QS]ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; [QE][QS2]பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான். [QE][PBR]
27. [QS]மனிதருடைய ஆவி[* மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள் ] யெகோவா தந்த விளக்கு; [QE][QS2]அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது. [QE][PBR]
28. [QS]அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; [QE][QS2]அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது. [QE][PBR]
29. [QS]வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; [QE][QS2]முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை. [QE][PBR]
30. [QS]அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; [QE][QS2]பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும். [QE][PBR]