1. திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; [QBR2] அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.
2. அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; [QBR2] அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.
3. சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; [QBR2] ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
4. சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; [QBR2] அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.
5. மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; [QBR2] மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
6. அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; [QBR2] ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
7. நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; [QBR2] அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
8. நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, [QBR2] அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
9. “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; [QBR2] நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?
10. பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் [QBR2] ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
11. சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை [QBR2] தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
12. கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் [QBR2] ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.
13. தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; [QBR2] விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
14. பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; [QBR2] வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
15. தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; [QBR2] ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
16. பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; [QBR2] வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
17. மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; [QBR2] ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.
18. நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; [QBR2] ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
19. புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; [QBR2] ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
20. ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், [QBR2] கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.
21. ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, [QBR2] முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.
22. “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; [QBR2] யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
23. போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; [QBR2] போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
24. மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; [QBR2] அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
25. முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, [QBR2] பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.
26. ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; [QBR2] பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.
27. மனிதருடைய ஆவி [*மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள்] யெகோவா தந்த விளக்கு; [QBR2] அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
28. அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; [QBR2] அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
29. வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; [QBR2] முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
30. அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; [QBR2] பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும். [PE]