1. {#1ஞானத்தினால் வரும் நன்மைகள் } [QS]என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, [QE][QS2]புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி, [QE]
2. [QS]நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, [QE][QS2]என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை. [QE]
3. [QS]உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, [QE][QS2]புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி, [QE]
4. [QS]சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, [QE][QS2]புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால், [QE]
5. [QS]அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; [QE][QS2]இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய். [QE]
6. [QS]ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; [QE][QS2]அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன. [QE]
7. [QS]அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, [QE][QS2]குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து, [QE]
8. [QS]அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; [QE][QS2]தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார். [QE][PBR]
9. [QS]அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் [QE][QS2]ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய். [QE]
10. [QS]ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், [QE][QS2]அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். [QE]
11. [QS]அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், [QE][QS2]புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும். [QE][PBR]
12. [QS]ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், [QE][QS2]வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். [QE]
13. [QS]அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, [QE][QS2]இருளான வழியில் நடக்கிறார்கள்; [QE]
14. [QS]அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, [QE][QS2]தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; [QE]
15. [QS]அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, [QE][QS2]அவர்களுடைய வழிகளோ தவறானவை. [QE][PBR]
16. [QS]ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் [QE][QS2]வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும். [QE]
17. [QS]தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, [QE][QS2]இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள். [QE]
18. [QS]அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, [QE][QS2]அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது. [QE]
19. [QS]அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, [QE][QS2]வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை. [QE][PBR]
20. [QS]இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக, [QE][QS2]நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக. [QE]
21. [QS]ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், [QE][QS2]குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள். [QE]
22. [QS]ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள், [QE][QS2]துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள். [QE]