1. {ஞானத்தினால் வரும் நன்மைகள்} [PS] என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, [QBR2] புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி, [QBR]
2. நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, [QBR2] என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை. [QBR]
3. உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, [QBR2] புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி, [QBR]
4. சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, [QBR2] புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால், [QBR]
5. அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; [QBR2] இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய். [QBR]
6. ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; [QBR2] அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன. [QBR]
7. அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, [QBR2] குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து, [QBR]
8. அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; [QBR2] தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.
9. அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் [QBR2] ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய். [QBR]
10. ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், [QBR2] அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். [QBR]
11. அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், [QBR2] புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும்.
12. ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், [QBR2] வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். [QBR]
13. அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, [QBR2] இருளான வழியில் நடக்கிறார்கள்; [QBR]
14. அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, [QBR2] தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; [QBR]
15. அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, [QBR2] அவர்களுடைய வழிகளோ தவறானவை.
16. ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் [QBR2] வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும். [QBR]
17. தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, [QBR2] இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள். [QBR]
18. அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, [QBR2] அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது. [QBR]
19. அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, [QBR2] வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.
20. இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக, [QBR2] நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக. [QBR]
21. ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், [QBR2] குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள். [QBR]
22. ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள், [QBR2] துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள். [PE]