1. [QS]சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, [QE][QS2]சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது. [QE][PBR]
2. [QS]விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான், [QE][QS2]பின்பு அந்த வேலைக்காரன் குடும்பத்தில் ஒருவனைப்போல் சகோதரருடைய உரிமைச் சொத்திலும் பங்குபெறுவான். [QE][PBR]
3. [QS]வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், [QE][QS2]ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா. [QE][PBR]
4. [QS]கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; [QE][QS2]பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள். [QE][PBR]
5. [QS]ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; [QE][QS2]பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை. [QE][PBR]
6. [QS]பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்; [QE][QS2]பிள்ளைகளுக்குப் பெருமை அவர்களின் பெற்றோர்களே. [QE][PBR]
7. [QS]சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது; [QE][QS2]அப்படியானால் பொய்பேசும் உதடுகள் ஆளுநருக்கு எவ்வளவு கேவலமானது! [QE][PBR]
8. [QS]இலஞ்சத்தைக் கொடுப்பவனுக்கு அது வசியம் போலிருக்கிறது; [QE][QS2]அவன் செல்லும் இடமெல்லாம் வெற்றி என நினைக்கிறான். [QE][PBR]
9. [QS]குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்; [QE][QS2]ஆனால் குற்றத்தை மீண்டும் நினைப்பூட்டுகிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள். [QE][PBR]
10. [QS]மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட [QE][QS2]பகுத்தறிகிறவர்களை வார்த்தையினால் கண்டிப்பதே பயனளிக்கும். [QE][PBR]
11. [QS]தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்; [QE][QS2]அழிவின் தூதனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். [QE][PBR]
12. [QS]தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, [QE][QS2]தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது. [QE][PBR]
13. [QS]ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், [QE][QS2]அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது. [QE][PBR]
14. [QS]வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; [QE][QS2]எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு. [QE][PBR]
15. [QS]குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான [QE][QS2]இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். [QE][PBR]
16. [QS]மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? [QE][QS2]ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. [QE][PBR]
17. [QS]நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; [QE][QS2]இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். [QE][PBR]
18. [QS]மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, [QE][QS2]தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். [QE][PBR]
19. [QS]வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; [QE][QS2]வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். [QE][PBR]
20. [QS]தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; [QE][QS2]பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். [QE][PBR]
21. [QS]முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; [QE][QS2]இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. [QE][PBR]
22. [QS]மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, [QE][QS2]ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது. [QE][PBR]
23. [QS]கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, [QE][QS2]நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள். [QE][PBR]
24. [QS]பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; [QE][QS2]ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது. [QE][PBR]
25. [QS]மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், [QE][QS2]தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும். [QE][PBR]
26. [QS]குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, [QE][QS2]உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல. [QE][PBR]
27. [QS]அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; [QE][QS2]புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள். [QE][PBR]
28. [QS]அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; [QE][QS2]தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள். [QE][PBR]