1. [QS]சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; [QE][QS2]ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது. [QE][PBR]
2. [QS]ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; [QE][QS2]ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும். [QE][PBR]
3. [QS]யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, [QE][QS2]அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. [QE][PBR]
4. [QS]சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, [QE][QS2]ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். [QE][PBR]
5. [QS]மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; [QE][QS2]ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். [QE][PBR]
6. [QS]நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, [QE][QS2]ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். [QE][PBR]
7. [QS]ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், [QE][QS2]ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை. [QE][PBR]
8. [QS]யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், [QE][QS2]ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும். [QE][PBR]
9. [QS]யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், [QE][QS2]ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார். [QE][PBR]
10. [QS]வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, [QE][QS2]கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள். [QE][PBR]
11. [QS]பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, [QE][QS2]மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! [QE][PBR]
12. [QS]கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், [QE][QS2]அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள். [QE][PBR]
13. [QS]மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; [QE][QS2]ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும். [QE][PBR]
14. [QS]பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, [QE][QS2]ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது. [QE][PBR]
15. [QS]ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, [QE][QS2]ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து. [QE][PBR]
16. [QS]அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, [QE][QS2]சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது. [QE][PBR]
17. [QS]பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, [QE][QS2]அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது. [QE][PBR]
18. [QS]முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; [QE][QS2]ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள். [QE][PBR]
19. [QS]சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; [QE][QS2]ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது. [QE][PBR]
20. [QS]ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், [QE][QS2]மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான். [QE][PBR]
21. [QS]புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, [QE][QS2]ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள். [QE][PBR]
22. [QS]ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், [QE][QS2]அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும். [QE][PBR]
23. [QS]தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; [QE][QS2]காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது! [QE][PBR]
24. [QS]வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, [QE][QS2]அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். [QE][PBR]
25. [QS]பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், [QE][QS2]ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார். [QE][PBR]
26. [QS]கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், [QE][QS2]ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை. [QE][PBR]
27. [QS]பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், [QE][QS2]ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள். [QE][PBR]
28. [QS]நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, [QE][QS2]ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது. [QE][PBR]
29. [QS]யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், [QE][QS2]ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார். [QE][PBR]
30. [QS]மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; [QE][QS2]நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது. [QE][PBR]
31. [QS]வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் [QE][QS2]ஞானிகளோடு குடியிருப்பார்கள். [QE][PBR]
32. [QS]அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள். [QE][PBR]
33. [QS]யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, [QE][QS2]கனத்திற்கு முன்பு தாழ்மை. [QE][PBR]