1. [QS]ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; [QE][QS2]ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள். [QE][PBR]
2. [QS]நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், [QE][QS2]அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள். [QE][PBR]
3. [QS]மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; [QE][QS2]ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும். [QE][PBR]
4. [QS]எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; [QE][QS2]ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு. [QE][PBR]
5. [QS]மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், [QE][QS2]ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள். [QE][PBR]
6. [QS]ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, [QE][QS2]ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது. [QE][PBR]
7. [QS]மூடரின் வழியைவிட்டு விலகியிரு, [QE][QS2]ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய். [QE][PBR]
8. [QS]தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், [QE][QS2]ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். [QE][PBR]
9. [QS]பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், [QE][QS2]ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது. [QE][PBR]
10. [QS]ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; [QE][QS2]அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. [QE][PBR]
11. [QS]கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், [QE][QS2]ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும். [QE][PBR]
12. [QS]மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; [QE][QS2]முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். [QE][PBR]
13. [QS]சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; [QE][QS2]மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம். [QE][PBR]
14. [QS]பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; [QE][QS2]நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள். [QE][PBR]
15. [QS]அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; [QE][QS2]ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள். [QE][PBR]
16. [QS]ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள். [QE][PBR]
17. [QS]முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; [QE][QS2]தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான். [QE][PBR]
18. [QS]அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; [QE][QS2]ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது. [QE][PBR]
19. [QS]தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், [QE][QS2]கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள். [QE][PBR]
20. [QS]ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; [QE][QS2]ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு. [QE][PBR]
21. [QS]தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; [QE][QS2]ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE][PBR]
22. [QS]தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? [QE][QS2]ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள். [QE][PBR]
23. [QS]கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; [QE][QS2]ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும். [QE][PBR]
24. [QS]ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், [QE][QS2]ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது. [QE][PBR]
25. [QS]மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, [QE][QS2]ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது. [QE][PBR]
26. [QS]யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; [QE][QS2]அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம். [QE][PBR]
27. [QS]யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; [QE][QS2]அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. [QE][PBR]
28. [QS]அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, [QE][QS2]ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான். [QE][PBR]
29. [QS]பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; [QE][QS2]ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். [QE][PBR]
30. [QS]மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; [QE][QS2]ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது. [QE][PBR]
31. [QS]ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள். [QE][PBR]
32. [QS]பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; [QE][QS2]ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள். [QE][PBR]
33. [QS]பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; [QE][QS2]மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை. [QE][PBR]
34. [QS]நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், [QE][QS2]ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம். [QE][PBR]
35. [QS]ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், [QE][QS2]ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான். [QE][PBR]