1. [QS]அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், [QE][QS2]ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள். [QE][PBR]
2. [QS]நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், [QE][QS2]ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார். [QE][PBR]
3. [QS]தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், [QE][QS2]நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது. [QE][PBR]
4. [QS]நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; [QE][QS2]ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள். [QE][PBR]
5. [QS]நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, [QE][QS2]ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை. [QE][PBR]
6. [QS]கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, [QE][QS2]ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும். [QE][PBR]
7. [QS]கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், [QE][QS2]ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும். [QE][PBR]
8. [QS]ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், [QE][QS2]ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார். [QE][PBR]
9. [QS]உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, [QE][QS2]வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல். [QE][PBR]
10. [QS]நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை. [QE][PBR]
11. [QS]தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், [QE][QS2]ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள். [QE][PBR]
12. [QS]தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; [QE][QS2]ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும். [QE][PBR]
13. [QS]தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், [QE][QS2]ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள். [QE][PBR]
14. [QS]ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், [QE][QS2]அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார். [QE][PBR]
15. [QS]மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், [QE][QS2]ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள். [QE][PBR]
16. [QS]மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், [QE][QS2]ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். [QE][PBR]
17. [QS]நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; [QE][QS2]ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள். [QE][PBR]
18. [QS]முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், [QE][QS2]ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும். [QE][PBR]
19. [QS]உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், [QE][QS2]ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும். [QE][PBR]
20. [QS]தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, [QE][QS2]ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. [QE][PBR]
21. [QS]நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, [QE][QS2]ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள். [QE][PBR]
22. [QS]பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், [QE][QS2]ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார். [QE][PBR]
23. [QS]விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும். [QE][PBR]
24. [QS]சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; [QE][QS2]ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும். [QE][PBR]
25. [QS]கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், [QE][QS2]ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும். [QE][PBR]
26. [QS]நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும். [QE][PBR]
27. [QS]சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; [QE][QS2]ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள். [QE][PBR]
28. [QS]நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; [QE][QS2]அப்பாதையில் மரணம் இல்லை. [QE][PBR]