1. [PS]இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்: [PE]
2. [QS]இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; [QE][QS2]நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம். [QE]
3. [QS]இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, [QE][QS2]அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. [QE]
4. [QS]இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், [QE][QS2]வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன. [QE]
5. [QS]ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; [QE][QS2]பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும். [QE]
6. [QS]இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், [QE][QS2]ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும். [QE][PBR]
7. [QS]யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; [QE][QS2]ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள். [QE][MSS]ஞானத்தை அடைவதற்கான புத்திமதிகள் [MSE]
8. {#1பாவிகளின் அழைப்பிதலைக் குறித்த எச்சரிக்கை } [QS]என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; [QE][QS2]உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே. [QE]
9. [QS]அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், [QE][QS2]உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும். [QE][PBR]
10. [QS]என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், [QE][QS2]அவர்களுடன் இழுப்புண்டு போகாதே. [QE]
11. [QS]அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; [QE][QS2]குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், [QE][QS2]அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்; [QE]
12. [QS]பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், [QE][QS2]மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; [QE]
13. [QS]பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, [QE][QS2]நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்; [QE]
14. [QS]எங்களுடன் பங்காளியாயிரு; [QE][QS2]நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால், [QE]
15. [QS]என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; [QE][QS2]அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே. [QE]
16. [QS]ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, [QE][QS2]இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன. [QE]
17. [QS]பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், [QE][QS2]அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா. [QE]
18. [QS]ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே, [QE]
19. [QS]தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; [QE][QS2]அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும். [QE]
20. {#1ஞானத்தைப் புறக்கணிக்காதிருக்க எச்சரிக்கை } [QS]ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, [QE][QS2]பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது; [QE]
21. [QS]அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, [QE][QS2]பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது. [QE][PBR]
22. [QS]“அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? [QE][QS2]ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? [QE][QS2]மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்? [QE]
23. [QS]நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! [QE][QS2]என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், [QE][QS2]என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். [QE]
24. [QS]ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, [QE][QS2]எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும், [QE]
25. [QS]நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, [QE][QS2]எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும் [QE]
26. [QS]உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், [QE][QS2]பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்; [QE]
27. [QS]பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், [QE][QS2]பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும், [QE][QS2]துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன். [QE][PBR]
28. [QS]“அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; [QE][QS2]அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள். [QE]
29. [QS]ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, [QE][QS2]யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள். [QE]
30. [QS]அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், [QE][QS2]எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால், [QE]
31. [QS]அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், [QE][QS2]அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள். [QE]
32. [QS]அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், [QE][QS2]மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்; [QE]
33. [QS]ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், [QE][QS2]அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.” [QE]