1. {#1ஒபதியாவின் தரிசனம் } [PS]ஒபதியாவின் தரிசனம். [PE][PBR] [PBR] [PS]யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: [PE][QS]“எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்” [QE][QS2]என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக [QE][QS2]ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான், [QE][QS]என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம். [QE][PBR]
2. [QS]“இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்; [QE][QS2]நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய். [QE]
3. [QS]கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, [QE][QS2]‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று [QE][QS2]உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, [QE][QS]உன் இருதயத்தின் அகந்தை [QE][QS2]உன்னை மோசம்போக்குகிறது. [QE]
4. [QS]நீ கழுகைப்போல உயரப்போனாலும், [QE][QS2]நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், [QE][QS2]அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே விழத்தள்ளுவேன்” என்று [QE][QS2]யெகோவா அறிவிக்கிறார். [QE]
5. [QS]“நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! [QE][QS2]திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் [QE][QS]உன்னிடத்தில் வந்தால், [QE][QS2]தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? [QE][QS]திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், [QE][QS2]சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ? [QE]
6. [QS]ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது; [QE][QS2]அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் சூறையாடப்பட்டது. [QE]
7. [QS]உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் [QE][QS2]உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; [QE][QS]உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி, [QE][QS2]உன்னை மேற்கொண்டார்கள்; [QE][QS]உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், [QE][QS2]ஆனால் நீ அதைக் கண்டுகொள்ளமாட்டாய். [QE][PBR]
8. [QS]“அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், [QE][QS2]ஏசாவின் மலைமேலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன், [QE][QS2]என்று யெகோவா சொல்லுகிறார். [QE]
9. [QS]தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும் [QE][QS2]கொலையினால் சங்கரிக்கப்படும்படி [QE][QS2]உன் வலிமைமிக்க வீரர்கள் கலங்குவார்கள். [QE]
10. [QS]நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம், [QE][QS2]வெட்கம் உன்னை மூடும்; [QE][QS2]நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவாய். [QE]
11. [QS]நீ எதிர்த்து நின்ற நாளிலும், [QE][QS2]பிறநாட்டார் அவன் சேனையைச் சிறைப்பிடித்துப்போன நாளிலும், [QE][QS]வெளிநாட்டார் அவன் வாசல்களுக்குள் புகுந்து, [QE][QS2]எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், [QE][QS2]நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய். [QE]
12. [QS]உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை [QE][QS2]நீ பிரியத்தோடே பாராமலும், [QE][QS]யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், [QE][QS2]அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே [QE][QS]நீ பெருமையாய்ப் பேசாமலும் [QE][QS2]இருக்கவேண்டியதாயிருந்தது. [QE]
13. [QS]என் ஜனத்தின் ஆபத்துநாளிலே [QE][QS2]நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், [QE][QS]அவர்கள் ஆபத்துநாளிலே [QE][QS2]அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், [QE][QS]அவர்கள் ஆபத்துநாளிலே [QE][QS2]அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும், [QE]
14. [QS]அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி [QE][QS2]வழிச்சந்திகளிலே நிற்காமலும், [QE][QS]இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் [QE][QS2]காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. [QE][PBR]
15. [QS]“எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய [QE][QS2]யெகோவாவினுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; [QE][QS]நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; [QE][QS2]உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். [QE]
16. [QS]நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே [QE][QS2]எல்லா நாடுகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; [QE][QS]அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள், [QE][QS2]குடித்து மயங்கியிருப்பார்கள். [QE]
17. [QS]ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு, [QE][QS2]அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; [QE][QS2]யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய உரிமைச்சொத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QE]
18. [QS]யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், [QE][QS2]யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜூவாலையுமாய் இருப்பார்கள்; [QE][QS]ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; [QE][QS2]அவர்கள் இவர்களைக் கொளுத்தி, [QE][QS]ஏசாவின் வம்சத்தில் [QE][QS2]மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்.” [QE][QS]யெகோவா இதைச் சொன்னார். [QE][PBR]
19. [QS]நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும், [QE][QS2]செபேலாவைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தரின் நாட்டையும் [QE][QS]சுதந்தரித்துக்கொள்வார்கள்; [QE][QS2]அவர்கள் எப்பிராயீமிம், சமாரியா நாடுகளையும் [QE][QS]சுதந்தரித்துக்கொள்வார்கள்; [QE][QS2]பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QE]
20. [QS]சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன [QE][QS2]இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும், [QE][QS]சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் [QE][QS2]நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QE]
21. [QS]ஏசாவின் மலையை ஆள்வதற்காக [QE][QS2]இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்தேறுவார்கள்; [QE][QS2]அப்பொழுது அரசாட்சி யெகோவாவினுடையதாய் இருக்கும். [QE]