1. {ஒபதியாவின் தரிசனம்} [PS] ஒபதியாவின் தரிசனம். [PS] யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: [QBR] “எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்” [QBR2] என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக [QBR2] ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான், [QBR] என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம்.
2. “இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்; [QBR2] நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய். [QBR]
3. கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, [QBR2] ‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று [QBR2] உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, [QBR] உன் இருதயத்தின் அகந்தை [QBR2] உன்னை மோசம்போக்குகிறது. [QBR]
4. நீ கழுகைப்போல உயரப்போனாலும், [QBR2] நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், [QBR2] அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே விழத்தள்ளுவேன்” என்று [QBR2] யெகோவா அறிவிக்கிறார். [QBR]
5. “நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! [QBR2] திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் [QBR] உன்னிடத்தில் வந்தால், [QBR2] தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? [QBR] திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், [QBR2] சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ? [QBR]
6. ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது; [QBR2] அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் சூறையாடப்பட்டது. [QBR]
7. உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் [QBR2] உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; [QBR] உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி, [QBR2] உன்னை மேற்கொண்டார்கள்; [QBR] உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், [QBR2] ஆனால் நீ அதைக் கண்டுகொள்ளமாட்டாய்.
8. “அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், [QBR2] ஏசாவின் மலைமேலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன், [QBR2] என்று யெகோவா சொல்லுகிறார். [QBR]
9. தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும் [QBR2] கொலையினால் சங்கரிக்கப்படும்படி [QBR2] உன் வலிமைமிக்க வீரர்கள் கலங்குவார்கள். [QBR]
10. நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம், [QBR2] வெட்கம் உன்னை மூடும்; [QBR2] நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவாய். [QBR]
11. நீ எதிர்த்து நின்ற நாளிலும், [QBR2] பிறநாட்டார் அவன் சேனையைச் சிறைப்பிடித்துப்போன நாளிலும், [QBR] வெளிநாட்டார் அவன் வாசல்களுக்குள் புகுந்து, [QBR2] எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், [QBR2] நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய். [QBR]
12. உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை [QBR2] நீ பிரியத்தோடே பாராமலும், [QBR] யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், [QBR2] அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே [QBR] நீ பெருமையாய்ப் பேசாமலும் [QBR2] இருக்கவேண்டியதாயிருந்தது. [QBR]
13. என் ஜனத்தின் ஆபத்துநாளிலே [QBR2] நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், [QBR] அவர்கள் ஆபத்துநாளிலே [QBR2] அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், [QBR] அவர்கள் ஆபத்துநாளிலே [QBR2] அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும், [QBR]
14. அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி [QBR2] வழிச்சந்திகளிலே நிற்காமலும், [QBR] இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் [QBR2] காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
15. “எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய [QBR2] யெகோவாவினுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; [QBR] நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; [QBR2] உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். [QBR]
16. நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே [QBR2] எல்லா நாடுகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; [QBR] அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள், [QBR2] குடித்து மயங்கியிருப்பார்கள். [QBR]
17. ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு, [QBR2] அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; [QBR2] யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய உரிமைச்சொத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QBR]
18. யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், [QBR2] யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜூவாலையுமாய் இருப்பார்கள்; [QBR] ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; [QBR2] அவர்கள் இவர்களைக் கொளுத்தி, [QBR] ஏசாவின் வம்சத்தில் [QBR2] மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்.” [QBR] யெகோவா இதைச் சொன்னார்.
19. நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும், [QBR2] செபேலாவைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தரின் நாட்டையும் [QBR] சுதந்தரித்துக்கொள்வார்கள்; [QBR2] அவர்கள் எப்பிராயீமிம், சமாரியா நாடுகளையும் [QBR] சுதந்தரித்துக்கொள்வார்கள்; [QBR2] பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QBR]
20. சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன [QBR2] இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும், [QBR] சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் [QBR2] நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். [QBR]
21. ஏசாவின் மலையை ஆள்வதற்காக [QBR2] இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்தேறுவார்கள்; [QBR2] அப்பொழுது அரசாட்சி யெகோவாவினுடையதாய் இருக்கும். [PE]