1. {நினிவேக்கு ஐயோ கேடு} [PS] இரத்தம் சிந்தின பட்டணமே, [QBR2] உனக்கு ஐயோ கேடு, [QBR] நீ பொய்யினாலும் கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறாய். [QBR2] ஒருபோதும் உன்னிடம் கொலை இல்லாமல் போவதில்லை. [QBR]
2. சவுக்கு அடியின் ஒசையும், [QBR2] உருளைகளின் சத்தமும், [QBR] குதிரைகளின் பாய்ச்சலும், [QBR2] தேர்களின் அதிர்வும் கேட்கிறதே, [QBR]
3. தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும், [QBR2] மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன, [QBR2] அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். [QBR] பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன. [QBR2] இறந்த உடல்களோ எண்ணற்றவை. [QBR] மக்கள் பிரேதங்கள்மேல் [QBR2] இடறி விழுகிறார்கள். [QBR]
4. இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும், [QBR2] கட்டுக்கடங்காத காமத்தினாலும் உண்டாயிற்று. [QBR2] அவள் வசீகரமுள்ளவளும், மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவளுமாயிருக்கிறாள். [QBR] அவள் நாடுகளைத் தன் வேசித்தனத்தினாலும், [QBR2] மக்கள் கூட்டங்களைத் தன் மந்திரங்களினாலும் அடிமைப்படுத்தியிருக்கிறாள்.
5. இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்: [QBR2] “நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து, [QBR2] உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்; [QBR] நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும், [QBR2] எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன். [QBR]
6. அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன். [QBR2] உன்னை அவமதிப்பாய் நடத்தி, [QBR2] உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன். [QBR]
7. உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி, [QBR2] ‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது; [QBR] அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள். [QBR2] உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”
8. நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும், [QBR2] நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும், [QBR2] நினிவேயே நீ சிறந்தவளோ? [QBR] நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும், [QBR2] தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன. [QBR]
9. அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன. [QBR2] பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன. [QBR]
10. ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு, [QBR2] நாடுகடத்தப்பட்டாள். [QBR] அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும், [QBR2] அடித்து நொறுக்கப்பட்டார்கள். [QBR] அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன. [QBR2] அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு [QBR] அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள். [QBR]
11. நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய். [QBR2] நீ ஒரு ஒளிவிடத்திற்குப் போவாய். [QBR2] பகைவரிடமிருந்து தப்ப புகலிடம் தேடுவாய்.
12. உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த [QBR2] பழங்களுடைய அத்திமரங்களைப் போலிருக்கும். [QBR] அவை உலுக்கப்பட்டபோது அவற்றின் பழங்கள் [QBR2] அவற்றைத் தின்கிறவனின் வாயிலே விழும். [QBR]
13. உன் இராணுவ வீரர்களைப் பார்! [QBR2] அவர்கள் பெண்களைப் போலிருக்கிறார்கள். [QBR] உன் நாட்டின் வாசல்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக [QBR2] விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கின்றன; [QBR2] வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்தது.
14. முற்றுகைக் காலத்துக்கென [QBR2] தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள், [QBR] உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்; [QBR2] களிமண்ணில் வேலைசெய்து சாந்தைக் குழைத்து [QBR2] செங்கல் சுவரைப் பழுது பாருங்கள். [QBR]
15. ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்; [QBR2] வாள் உங்களை வெட்டி வீழ்த்தும். [QBR2] அது உங்களை வெட்டுக்கிளிகளைப்போல் தின்னும். [QBR] பச்சைக்கிளிகளைப்போல் பெருகுங்கள், [QBR2] வெட்டுக்கிளிகளைப்போல் பெருகுங்கள்! [QBR]
16. உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய், [QBR2] ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் [QBR] நாட்டை வெறுமையாக்கி விட்டு, [QBR2] பறந்து போய்விடுகிறார்கள். [QBR]
17. உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். [QBR2] உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் [QBR2] வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள். [QBR] சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன. [QBR2] ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.
18. அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள். [QBR2] உனது உயர்குடி மக்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள். [QBR] உனது மக்கள் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். [QBR2] அவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை. [QBR]
19. உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது; [QBR2] உனது காயம் மரணத்திற்கு ஏதுவானது. [QBR] உன்னைக் குறித்த செய்தியைக் கேட்கிறவர்கள் எல்லோரும், [QBR2] உன் வீழ்ச்சியைப் பார்த்து கைத்தட்டுகிறார்கள். [QBR] ஏனெனில் உன் முடிவற்ற [QBR2] கொடுமையை அறியாதவன் யார்? [PE]