1. {#1நினிவேயின் வீழ்ச்சி } [QS]நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; [QE][QS2]கோட்டையைக் காவல் செய், [QE][QS2]வீதியை கண்காணி, [QE][QS2]உன்னைத் திடப்படுத்திக்கொள், [QE][QS2]உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு. [QE][PBR]
2. [QS]அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, [QE][QS2]அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், [QE][QS]யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, [QE][QS2]யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார். [QE][PBR]
3. [QS]நினிவேயைத் தாக்குகிற [QE][QS2]இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன. [QE][QS]போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள். [QE][QS2]தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது. [QE][QS2]தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன. [QE]
4. [QS]தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, [QE][QS2]கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. [QE][QS]அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, [QE][QS2]அவை மின்னலைப்போல் பறக்கின்றன. [QE][PBR]
5. [QS]நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். [QE][QS2]இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். [QE][QS]அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். [QE][QS2]பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. [QE]
6. [QS]ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், [QE][QS2]ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது. [QE]
7. [QS]இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது [QE][QS2]பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. [QE][QS]பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, [QE][QS2]புறாக்களைப்போல் புலம்புகிறார்கள். [QE]
8. [QS]நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. [QE][QS2]அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. [QE][QS]“நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். [QE][QS2]ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை. [QE]
9. [QS]வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், [QE][QS2]தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; [QE][QS]அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் [QE][QS2]குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள். [QE]
10. [QS]நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! [QE][QS2]உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன, [QE][QS2]எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன. [QE][PBR]
11. [QS]அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். [QE][QS2]ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே? [QE][QS]அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே? [QE][QS2]சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே? [QE]
12. [QS]சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. [QE][QS2]தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. [QE][QS]தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், [QE][QS2]இரையினால் தன் குகையையும் நிரப்பியது. [QE][PBR]
13. [QS]நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” [QE][QS2]என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]“புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன், [QE][QS2]உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும். [QE][QS2]பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன். [QE][QS]உங்கள் தூதுவர்களின் குரல்கள் [QE][QS2]இனிமேலும் கேட்கப்படுவதில்லை.” [QE]