1. [PS]நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம். [PE][PBR]
2. {#1நினிவேக்கு எதிரான யெகோவாவின் கோபம் } [QS]யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; [QE][QS2]யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், [QE][QS]கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். [QE][QS2]யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, [QE][QS2]தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். [QE]
3. [QS]யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; [QE][QS2]யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; [QE][QS]அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. [QE][QS2]மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன. [QE]
4. [QS]அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்; [QE][QS2]ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார். [QE][QS]பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன. [QE][QS2]லெபனோனின் பூக்கள் வாடுகின்றன. [QE]
5. [QS]அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; [QE][QS2]குன்றுகள் உருகிப்போகும். [QE][QS]அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும். [QE][QS2]உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள். [QE]
6. [QS]அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? [QE][QS2]அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? [QE][QS]அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; [QE][QS2]அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன. [QE][PBR]
7. [QS]யெகோவா நல்லவர், [QE][QS2]அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். [QE][QS]அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார். [QE]
[QS2]8. ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் [QE][QS]நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; [QE][QS2]அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார். [QE][PBR]
9. [QS]அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும் [QE][QS2]அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; [QE][QS2]துன்பம் இரண்டாம் முறையும் வராது. [QE]
10. [QS]அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு, [QE][QS2]தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள். [QE][QS2]அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள். [QE]
11. [QS]நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து, [QE][QS2]கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன், [QE][QS2]உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான். [QE]
12. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன. [QE][QS2]“அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள். [QE][QS]யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும், [QE][QS2]இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன். [QE]
13. [QS]நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன். [QE][QS2]உன் விலங்குகளையும் உடைப்பேன்.” [QE][PBR]
14. [QS]நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். [QE][QS2]“உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள். [QE][QS]உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், [QE][QS2]வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன். [QE][QS]நீ வெறுப்புக்குரியவனானபடியால், [QE][QS2]நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.” [QE][PBR]
15. [QS]யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, [QE][QS2]நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், [QE][QS2]உன் மலைகள்மேல் வருகின்றன. [QE][QS]உன் பண்டிகைகளைக் கொண்டாடு. [QE][QS2]உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. [QE][QS]கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; [QE][QS2]அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள். [QE]