1. நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.
2. {நினிவேக்கு எதிரான யெகோவாவின் கோபம்} [PS] யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; [QBR2] யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், [QBR] கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். [QBR2] யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, [QBR2] தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். [QBR]
3. யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; [QBR2] யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; [QBR] அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. [QBR2] மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன. [QBR]
4. அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்; [QBR2] ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார். [QBR] பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன. [QBR2] லெபனோனின் பூக்கள் வாடுகின்றன. [QBR]
5. அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; [QBR2] குன்றுகள் உருகிப்போகும். [QBR] அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும். [QBR2] உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள். [QBR]
6. அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? [QBR2] அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? [QBR] அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; [QBR2] அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
7. யெகோவா நல்லவர், [QBR2] அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். [QBR] அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார். [QBR2]
8. ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் [QBR] நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; [QBR2] அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.
9. அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும் [QBR2] அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; [QBR2] துன்பம் இரண்டாம் முறையும் வராது. [QBR]
10. அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு, [QBR2] தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள். [QBR2] அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள். [QBR]
11. நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து, [QBR2] கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன், [QBR2] உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான். [PE][PS]
12. யெகோவா சொல்வது இதுவே: [QBR] அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன. [QBR2] “அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள். [QBR] யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும், [QBR2] இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன். [QBR]
13. நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன். [QBR2] உன் விலங்குகளையும் உடைப்பேன்.”
14. நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். [QBR2] “உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள். [QBR] உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், [QBR2] வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன். [QBR] நீ வெறுப்புக்குரியவனானபடியால், [QBR2] நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
15. யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து, [QBR2] நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள், [QBR2] உன் மலைகள்மேல் வருகின்றன. [QBR] உன் பண்டிகைகளைக் கொண்டாடு. [QBR2] உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று. [QBR] கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை; [QBR2] அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள். [PE]