1. {இஸ்ரயேலின் அவலநிலை குறித்து மீகாவின் கவலை} [PS] என் அவலநிலைதான் என்ன? [QBR] கோடைகால அறுப்புக்குப்பின் திராட்சைத் தோட்டத்தில் [QBR2] விடப்பட்ட பழங்களைச் சேகரிப்பவன் போலானேன்; [QBR2] சாப்பிடுவதற்கான ஒரு திராட்சைக் குலையும் இல்லை. [QBR] நான் சாப்பிட ஆசைப்படும், [QBR2] முதலில் பழுத்த அத்திப்பழமும் இல்லை. [QBR]
2. நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள். [QBR2] நீதிமான் ஒருவனும் இல்லை. [QBR] எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள். [QBR2] ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான். [QBR]
3. அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை. [QBR2] ஆளுநர் அன்பளிப்புகளை வற்புறுத்திக் கேட்கிறான். [QBR] நீதிபதிகள் இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். [QBR2] அதிகாரத்தில் உள்ளவர்கள் தாம் விரும்புவதையே கட்டளையிடுகிறார்கள். [QBR2] இவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்து சதி செய்கிறார்கள். [QBR]
4. அவர்களில் சிறந்தவன் எனப்படுபவன் முட்செடி போன்றவன். [QBR2] நீதிமான் முள்வேலியைவிட மிகவும் கூர்மையானவன். [QBR] இறைவன் உங்களைச் சந்திக்கும் நாள், [QBR2] உங்கள் இறைவாக்கினர் எச்சரித்த அந்த நாள் வந்துவிட்டது. [QBR2] இதுவே அவர்களின் குழப்பத்தின் காலம். [QBR]
5. அயலவனை நம்பாதே; [QBR2] சிநேகிதனையும் நம்பவேண்டாம். [QBR] உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிற மனைவியோடும் [QBR2] உன் வார்த்தைகளைக்குறித்து கவனமாயிரு. [QBR]
6. ஏனெனில், மகன் தகப்பனை அவமதிக்கிறான்; [QBR2] மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகிறாள்; [QBR] மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள்; [QBR2] மனிதனுடைய பகைவர்கள் அவன் வீட்டார்தானே.
7. நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன். [QBR2] என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன். [QBR2] என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.
8. {இஸ்ரயேல் உயரும்} [PS] எருசலேம் மக்கள் சொல்கிறதாவது: [QBR2] எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே; [QBR] நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம். [QBR2] நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார். [QBR]
9. நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், [QBR2] அவரின் கோபத்தைச் சுமப்போம். [QBR] அவர் எங்களுக்காக வாதாடி, [QBR2] எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார். [QBR] அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார். [QBR2] நாங்கள் அவரது நீதியைக் காண்போம். [QBR]
10. அப்பொழுது எங்கள் பகைவன் இதைக்கண்டு [QBR2] வெட்கத்திற்குள்ளாவான். [QBR] “உங்கள் யெகோவாவாகிய இறைவன் எங்கே?” [QBR2] என்று எங்களிடம் கேட்டவளின் [QBR] வீழ்ச்சியை எங்கள் கண்கள் காணும். [QBR2] அப்பொழுது அவள் வீதிகளிலுள்ள [QBR2] சேற்றைப்போல் காலின்கீழ் மிதிக்கப்படுவாள்.
11. எருசலேம் மக்களே! உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள் வருகிறது, [QBR2] உங்கள் எல்லையை விரிவுபடுத்தும் நாளும் வருகிறது. [QBR]
12. அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும் [QBR2] உங்கள் மக்கள் உங்களிடம் வருவார்கள். [QBR2] எகிப்து முதல், ஐபிராத்து நதிவரையுள்ள தேசங்களிலிருந்தும், [QBR] ஒரு கடல் முதல் மறுகடல் வரையுள்ள நாடுகளிலிருந்தும், [QBR2] ஒரு மலை முதல், மறு மலைவரையுள்ள இடங்களிலிருந்தும் [QBR2] உங்கள் மக்கள் அனைவரும் உங்களிடம் கூடிவருவார்கள். [QBR]
13. ஆயினும் பூமியின் மற்ற பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின் [QBR2] தீய செயல்களின் நிமித்தம் பாழாய்ப்போம்.
14. {மன்றாட்டும் துதியும்} [PS] யெகோவாவே, ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே [QBR2] வாழ்கிறவர்களான உமது மக்களை, [QBR] உமது உரிமைச்சொத்தான மந்தையை, [QBR2] உமது கோலினால் மேய்த்துக்கொள்ளும். [QBR] இவர்கள் முந்தைய நாட்களைப்போல் பாசானிலும், [QBR2] கீலேயாத்திலும் மேயட்டும்.
15. “நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப்போல, [QBR2] நான் உங்களுக்கு என் அதிசயங்களைக் காண்பிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
16. பிறநாடுகள் யாவும் அதைக்கண்டு வெட்கமடைவார்கள். [QBR2] அவர்கள் தங்கள் ஆற்றல்களை [QBR] இழந்து தங்கள் வாயைக் கைகளால் பொத்திக்கொள்வார்கள். [QBR2] அவர்களுடைய காதுகள் செவிடாய்ப்போகும். [QBR]
17. அவர்கள் பாம்மைப்போலவும், [QBR2] நிலத்தின் ஊரும் உயிரினங்களைப்போலவும் புழுதியை நக்குவார்கள். [QBR] அவர்கள் தங்கள் குகைகளை விட்டு நடுக்கத்துடன் வெளியேறுவார்கள். [QBR2] எங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் அவர்கள் பயத்துடன் திரும்பி வருவார்கள். [QBR2] அப்போது அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். [QBR]
18. உமக்கு நிகரான இறைவன் யார்? [QBR2] உமது சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, [QBR2] அவர்களுடைய மீறுதல்களையும் மன்னிக்கிற உமக்கு நிகரானவர் யார்? [QBR] நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பவரல்ல. [QBR2] ஆனால் இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கிறீர். [QBR]
19. நீர் மறுபடியும் எங்கள்மேல் கருணை காட்டுவீர். [QBR2] நீர் எங்கள் பாவங்களை காலின்கீழ் மிதித்து, [QBR2] எங்கள் எல்லா அக்கிரமங்களையும் கடலின் ஆழங்களிலே எறிந்து விடுவீர். [QBR]
20. முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு [QBR2] ஆணையிட்டு வாக்குக்கொடுத்தபடியே, [QBR] நீர் யாக்கோபுக்கும் உண்மையுள்ளவராயிருப்பீர், [QBR2] ஆபிரகாமுக்கு அன்பைக் காட்டுவீர். [PE]