1. {#1வாக்களிக்கப்பட்ட ஆளுநர் } [QS]இராணுவவீரர்களின் நகரமே, உன் இராணுவவீரர்களைக் கூட்டிச்சேர்; [QE][QS2]ஏனெனில் நமக்கு எதிராக முற்றுகையிடப் பட்டிருக்கிறது. [QE][QS]அவர்கள் இஸ்ரயேலின் ஆளுநரை, [QE][QS2]கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள். [QE][PBR]
2. [QS]“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, [QE][QS2]நீ யூதாவின் வம்சங்களில் சிறிதாயிருப்பினும் [QE][QS]இஸ்ரயேலின்மேல் என் சார்பாக ஆளுநராக வரப்போகிறவர், [QE][QS2]உன்னிலிருந்து தோன்றுவார். [QE][QS]அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான [QE][QS2]முந்திய காலத்தினுடையது.” [QE][PBR]
3. [QS]பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும் [QE][QS2]யெகோவா தம் மக்களை கைவிடுவார். [QE][QS]அதன்பின் அவருடைய சகோதரரில் மீதியாயிருப்பவர்கள் [QE][QS2]இஸ்ரயேலருடன் சேரும்படி திரும்பி வருவார்கள். [QE][PBR]
4. [QS]அந்த ஆளுநர் வரும்போது, [QE][QS2]அவர் யெகோவாவின் வல்லமையுடனும், [QE][QS2]தமது இறைவனாகிய யெகோவாவின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். [QE][QS]அப்பொழுது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். [QE][QS2]அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும். [QE][PBR]
5. [QS]அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார். [QE][QS2]நமது நாட்டின்மேல் அசீரியன் படையெடுத்து, [QE][QS2]நமது அரண்மனைகளை மிதிக்கும்போது, [QE][QS]நாங்கள் அவனுக்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும், [QE][QS2]எட்டு தலைவர்களையும் எழுப்புவோம். [QE]
6. [QS]அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள். [QE][QS2]நிம்ரோத் நாட்டை, உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள். [QE][QS]அசீரியன் எங்கள் நாட்டின்மேல் படையெடுத்து, [QE][QS2]எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது, [QE][QS2]அவர் எங்களை விடுவிப்பார். [QE][PBR]
7. [QS]அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர், [QE][QS2]மக்கள் கூட்டங்களிடையே யெகோவாவிடமிருந்து வரும் பனியைப்போல் இருப்பார்கள், [QE][QS]அவர்கள் மனிதனுக்காகக் காத்திராமலும், [QE][QS2]மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும் [QE][QS]புல்லின்மேல் பெய்யும் [QE][QS2]மழையைப்போல் இருப்பார்கள். [QE]
8. [QS]எனவே, யாக்கோபில் மீதியானோர், [QE][QS2]நாடுகளின் மத்தியில் திரளான மக்களின் நடுவிலே இருப்பார்கள். [QE][QS]அவர்கள் காட்டு மிருகங்களின் நடுவில் இருக்கும் சிங்கம் போலவும், [QE][QS2]செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற, [QE][QS]சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பார்கள். [QE][QS2]ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும். [QE]
9. [QS]அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும். [QE][QS2]அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள். [QE]
10. [PS]யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது: [PE][QS]“அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன். [QE][QS2]உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன். [QE]
11. [QS]உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், [QE][QS2]உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன். [QE]
12. [QS]உன் மாயவித்தையை அழிப்பேன். [QE][QS2]மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது. [QE]
13. [QS]நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், [QE][QS2]புனித கற்களையும் உன் மத்தியிலிருந்து அழிப்பேன். [QE][QS]நீ இனிமேலும் உன் கைகளின் வேலையான விக்கிரகங்களை [QE][QS2]விழுந்து வணங்கமாட்டாய். [QE]
14. [QS]உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி, [QE][QS2]உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன். [QE]
15. [QS]அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும், [QE][QS2]கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.” [QE]