1. {வாக்களிக்கப்பட்ட ஆளுநர்} [PS] இராணுவவீரர்களின் நகரமே, உன் இராணுவவீரர்களைக் கூட்டிச்சேர்; [QBR2] ஏனெனில் நமக்கு எதிராக முற்றுகையிடப் பட்டிருக்கிறது. [QBR] அவர்கள் இஸ்ரயேலின் ஆளுநரை, [QBR2] கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்.
2. “ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, [QBR2] நீ யூதாவின் வம்சங்களில் சிறிதாயிருப்பினும் [QBR] இஸ்ரயேலின்மேல் என் சார்பாக ஆளுநராக வரப்போகிறவர், [QBR2] உன்னிலிருந்து தோன்றுவார். [QBR] அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான [QBR2] முந்திய காலத்தினுடையது.”
3. பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும் [QBR2] யெகோவா தம் மக்களை கைவிடுவார். [QBR] அதன்பின் அவருடைய சகோதரரில் மீதியாயிருப்பவர்கள் [QBR2] இஸ்ரயேலருடன் சேரும்படி திரும்பி வருவார்கள்.
4. அந்த ஆளுநர் வரும்போது, [QBR2] அவர் யெகோவாவின் வல்லமையுடனும், [QBR2] தமது இறைவனாகிய யெகோவாவின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். [QBR] அப்பொழுது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். [QBR2] அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.
5. அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார். [QBR2] நமது நாட்டின்மேல் அசீரியன் படையெடுத்து, [QBR2] நமது அரண்மனைகளை மிதிக்கும்போது, [QBR] நாங்கள் அவனுக்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும், [QBR2] எட்டு தலைவர்களையும் எழுப்புவோம். [QBR]
6. அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள். [QBR2] நிம்ரோத் நாட்டை, உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள். [QBR] அசீரியன் எங்கள் நாட்டின்மேல் படையெடுத்து, [QBR2] எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது, [QBR2] அவர் எங்களை விடுவிப்பார்.
7. அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர், [QBR2] மக்கள் கூட்டங்களிடையே யெகோவாவிடமிருந்து வரும் பனியைப்போல் இருப்பார்கள், [QBR] அவர்கள் மனிதனுக்காகக் காத்திராமலும், [QBR2] மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும் [QBR] புல்லின்மேல் பெய்யும் [QBR2] மழையைப்போல் இருப்பார்கள். [QBR]
8. எனவே, யாக்கோபில் மீதியானோர், [QBR2] நாடுகளின் மத்தியில் திரளான மக்களின் நடுவிலே இருப்பார்கள். [QBR] அவர்கள் காட்டு மிருகங்களின் நடுவில் இருக்கும் சிங்கம் போலவும், [QBR2] செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற, [QBR] சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பார்கள். [QBR2] ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும். [QBR]
9. அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும். [QBR2] அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள். [PE][PS]
10. யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது: [QBR] “அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன். [QBR2] உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன். [QBR]
11. உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், [QBR2] உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன். [QBR]
12. உன் மாயவித்தையை அழிப்பேன். [QBR2] மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது. [QBR]
13. நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், [QBR2] புனித கற்களையும் உன் மத்தியிலிருந்து அழிப்பேன். [QBR] நீ இனிமேலும் உன் கைகளின் வேலையான விக்கிரகங்களை [QBR2] விழுந்து வணங்கமாட்டாய். [QBR]
14. உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி, [QBR2] உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன். [QBR]
15. அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும், [QBR2] கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.” [PE]