1. {#1தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுதல் } [PS]அப்பொழுது நான் சொன்னதாவது: [PE][QS]“யாக்கோபின் தலைவர்களே; [QE][QS2]இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள். [QE][QS]நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா, [QE]
[QS2]2. ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். [QE][QS]என் மக்களின் தோலையும், [QE][QS2]அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள். [QE]
3. [QS]என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, [QE][QS2]அவர்களின் தோலையெல்லாம் உரித்து, [QE][QS2]எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள். [QE][QS]சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும், [QE][QS2]பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.” [QE][PBR]
4. [QS]ஆனாலும், நாட்கள் வருகின்றன. [QE][QS2]அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள். [QE][QS]ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். [QE][QS2]அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக [QE][QS2]அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார். [QE]
5. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற [QE][QS2]“பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது, [QE][QS]ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால், [QE][QS2]‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள். [QE][QS]அப்படிக் கொடுக்காவிட்டால், [QE][QS2]அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள். [QE]
6. [QS]ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும், [QE][QS2]குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மேல் வரும். [QE][QS]பொய்த் தீர்க்கதரிசிகளுக்குச் சூரியன் மறைந்து, [QE][QS2]பகலும் அவர்களுக்கு இருண்டுபோகும். [QE]
7. [QS]தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள். [QE][QS2]குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள். [QE][QS]இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால், [QE][QS2]அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார். [QE]
8. [QS]ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், [QE][QS2]இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி, [QE][QS2]யெகோவாவின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன். [QE][QS]அவர் என்னை நீதியினாலும், [QE][QS2]பெலத்தினாலும் நிறைத்திருக்கிறார். [QE][PBR]
9. [QS]ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே, [QE][QS2]இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே, [QE][QS]நீதியை உதாசீனம்பண்ணி, [QE][QS2]நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள். [QE]
10. [QS]இரத்தம் சிந்துதலினால் சீயோனையும், [QE][QS2]கொடுமையினால் எருசலேமையும் கட்டுகிறவர்களே கேளுங்கள். [QE]
11. [QS]உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். [QE][QS2]உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள். [QE][QS2]உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள். [QE][QS]ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ? [QE][QS2]பேராபத்து நமக்கு உண்டாகாது” [QE][QS2]என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். [QE]
12. [QS]ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே, [QE][QS2]உங்கள் செயல்களின் நிமித்தம், [QE][QS]சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், [QE][QS2]ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும். [QE]