1. [QS]யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்; [QE][QS2]எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். [QE]
2. [QS]எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன. [QE][QS2]எங்கள் வீடுகள் பிறநாட்டவருக்குக் கொடுக்கப்பட்டன. [QE]
3. [QS]நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை. [QE][QS2]எங்கள் தாய்மார்கள் விதவைகளைப் போலிருக்கிறார்கள். [QE]
4. [QS]நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; [QE][QS2]எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது. [QE]
5. [QS]எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்; [QE][QS2]நாங்கள் களைத்துப்போனோம். ஆனால் எங்களுக்கு ஓய்வு இல்லை. [QE]
6. [QS]நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும், [QE][QS2]அசீரியாவுக்குக் கீழும் அடங்கிப்போனோம். [QE]
7. [QS]எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்; [QE][QS2]நாங்களோ அவர்களுடைய தண்டனைகளைச் சுமக்கிறோம். [QE]
8. [QS]அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், [QE][QS2]அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை. [QE]
9. [QS]பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம், [QE][QS2]எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே, எங்கள் உணவைத் தேடுகிறோம். [QE]
10. [QS]பசியின் கொடுமையினால், [QE][QS2]காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று. [QE]
11. [QS]பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும் [QE][QS2]மானபங்கம் செய்யப்படுகிறார்கள். [QE]
12. [QS]இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; [QE][QS2]முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை. [QE]
13. [QS]இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்; [QE][QS2]சிறுவர்கள் பாரமான மரங்களைச் சுமந்து தள்ளாடுகிறார்கள். [QE]
14. [QS]முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்; [QE][QS2]வாலிபர் தாங்கள் இசை மீட்பதை நிறுத்திவிட்டார்கள். [QE]
15. [QS]எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; [QE][QS2]எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று. [QE]
16. [QS]எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. [QE][QS2]நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு! [QE]
17. [QS]இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று, [QE][QS2]இவைகளினால் எங்கள் கண்கள் மங்கிப்போகின்றன; [QE]
18. [QS]ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; [QE][QS2]அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன. [QE][PBR]
19. [QS]யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்; [QE][QS2]உமது சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். [QE]
20. [QS]ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்? [QE][QS2]ஏன் எங்களை நெடுங்காலமாய் கைவிடுகிறீர்? [QE]
21. [QS]யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்; [QE][QS2]எங்கள் நாட்களை முந்திய நாட்களைப்போல் புதிதாக்கும். [QE]
22. [QS]அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ? [QE][QS2]எங்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருக்கிறீரே! [QE]