1. [QS][* இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. ] தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, [QE][QS2]சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! [QE][QS]பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் [QE][QS2]தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன. [QE][PBR]
2. [QS]ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, [QE][QS2]விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், [QE][QS]இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். [QE][QS2]குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள். [QE][PBR]
3. [QS]நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு [QE][QS2]பால் கொடுக்கும். [QE][QS]ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, [QE][QS2]கொடூர மனமுள்ளவர்களானார்கள். [QE][PBR]
4. [QS]தாகத்தினால் குழந்தையின் நாவு [QE][QS2]அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; [QE][QS]பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், [QE][QS2]ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை. [QE][PBR]
5. [QS]சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் [QE][QS2]வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். [QE][QS]மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் [QE][QS2]இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள். [QE][PBR]
6. [QS]உதவும் கரம் எதுவுமின்றி [QE][QS2]ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் [QE][QS]தண்டனையைவிட, என் மக்களின் [QE][QS2]தண்டனை பெரிதாயிருக்கிறது. [QE][PBR]
7. [QS]அவர்களின் இளவரசர்கள்[† இளவரசர்கள் அல்லது நசரேயர்கள். நியா. 13:5. ] உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், [QE][QS2]பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். [QE][QS]அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், [QE][QS2]அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன. [QE][PBR]
8. [QS]ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; [QE][QS2]வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். [QE][QS]அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி [QE][QS2]காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. [QE][PBR]
9. [QS]பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, [QE][QS2]வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; [QE][QS]பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் [QE][QS2]பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள். [QE][PBR]
10. [QS]இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் [QE][QS2]தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, [QE][QS]என் மக்கள் அழிக்கப்படுகையில் [QE][QS2]பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே! [QE][PBR]
11. [QS]யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; [QE][QS2]அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார். [QE][QS]அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார். [QE][QS2]அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது. [QE][PBR]
12. [QS]பகைவர்களும் எதிரிகளும், [QE][QS2]எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, [QE][QS]பூமியின் அரசர்களோ [QE][QS2]உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை. [QE][PBR]
13. [QS]ஆனால் அது நடந்தது. [QE][QS2]அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும், [QE][QS]ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது. [QE][QS2]அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது. [QE][PBR]
14. [QS]இப்பொழுதோ அவர்கள் குருடரான [QE][QS2]மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். [QE][QS]அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால், [QE][QS2]அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை. [QE][PBR]
15. [QS]“விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். [QE][QS2]விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” [QE][QS]என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். [QE][QS2]அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், [QE][QS2]“இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள். [QE][PBR]
16. [QS]யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; [QE][QS2]அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை. [QE][QS]ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை, [QE][QS2]முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை. [QE][PBR]
17. [QS]அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் [QE][QS2]எங்கள் கண்கள் மங்கிப்போயின; [QE][QS]எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, [QE][QS2]எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே! [QE][PBR]
18. [QS]மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், [QE][QS2]அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. [QE][QS]எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, [QE][QS2]ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது. [QE][PBR]
19. [QS]எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், [QE][QS2]ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்; [QE][QS]அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில் [QE][QS2]எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள். [QE][PBR]
20. [QS]யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், [QE][QS2]அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான். [QE][QS]அவனுடைய நிழலின்கீழ், [QE][QS2]நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம். [QE][PBR]
21. [QS]ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, [QE][QS2]நீ மகிழ்ந்து சந்தோஷப்படு. [QE][QS]ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்; [QE][QS2]நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய். [QE][PBR]
22. [QS]சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; [QE][QS2]உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். [QE][QS]ஆனால் ஏதோமின் மகளே, [QE][QS2]அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார். [QE][PBR] [PBR]