1. [QS][* இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை; இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. ] அவருடைய கோபத்தின் பிரம்பினால் [QE][QS2]உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே. [QE]
2. [QS]அவர் என்னை வெளியே துரத்தி, [QE][QS2]வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார். [QE]
3. [QS]உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் [QE][QS2]அவர் தமது கையை என்மேல் திருப்பினார். [QE][PBR]
4. [QS]எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், [QE][QS2]என் எலும்புகளையும் உடைத்துவிட்டார். [QE]
5. [QS]அவர், கசப்பும் கஷ்டமும் [QE][QS2]முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார். [QE]
6. [QS]வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், [QE][QS2]என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார். [QE][PBR]
7. [QS]நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; [QE][QS2]அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார். [QE]
8. [QS]நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, [QE][QS2]கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார். [QE]
9. [QS]செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; [QE][QS2]அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார். [QE][PBR]
10. [QS]பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், [QE][QS2]மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும், [QE]
11. [QS]அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, [QE][QS2]என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார். [QE]
12. [QS]அவர் தம்முடைய வில்லை வளைத்து, [QE][QS2]தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார். [QE][PBR]
13. [QS]அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த [QE][QS2]அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார். [QE]
14. [QS]நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; [QE][QS2]அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். [QE]
15. [QS]அவர் என்னை கசப்பினால் நிரப்பி, [QE][QS2]காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார். [QE][PBR]
16. [QS]அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; [QE][QS2]அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். [QE]
17. [QS]நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; [QE][QS2]சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். [QE]
18. [QS]ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த [QE][QS2]எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” [QE][PBR]
19. [QS]நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், [QE][QS2]அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். [QE]
20. [QS]நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், [QE][QS2]அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. [QE]
21. [QS]ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். [QE][QS2]அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: [QE][PBR]
22. [QS]அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். [QE][QS2]ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. [QE]
23. [QS]உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; [QE][QS2]உமது உண்மை பெரியது. [QE]
24. [QS]நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; [QE][QS2]ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.” [QE][PBR]
25. [QS]யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், [QE][QS2]அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர். [QE]
26. [QS]எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக [QE][QS2]அமைதியாய் காத்திருப்பது நல்லது. [QE]
27. [QS]இளைஞனாய் இருக்கும்போதே [QE][QS2]அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது. [QE][PBR]
28. [QS]யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், [QE][QS2]அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும். [QE]
29. [QS]அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், [QE][QS2]ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். [QE]
30. [QS]அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், [QE][QS2]பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும். [QE][PBR]
31. [QS]ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் [QE][QS2]என்றென்றும் கைவிடப்படுவதில்லை. [QE]
32. [QS]அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். [QE][QS2]அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது. [QE]
33. [QS]அவர் துன்பத்தையோ துக்கத்தையோ [QE][QS2]மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை. [QE][PBR]
34. [QS]நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் [QE][QS2]கால்களின்கீழ் மிதிப்பதையும், [QE]
35. [QS]ஒருவனின் மனித உரிமைகளை [QE][QS2]மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும், [QE]
36. [QS]ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் [QE][QS2]யெகோவா காணாதிருப்பாரோ? [QE][PBR]
37. [QS]யெகோவா உத்தரவிடாவிட்டால், [QE][QS2]எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்? [QE]
38. [QS]பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் [QE][QS2]மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன. [QE]
39. [QS]வாழ்கிற எந்த மனிதனும், [QE][QS2]தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்? [QE][PBR]
40. [QS]ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், [QE][QS2]யெகோவாவிடம் திரும்புவோம். [QE]
41. [QS]எங்கள் இருதயங்களையும், கைகளையும் [QE][QS2]பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி: [QE]
42. [QS]“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், [QE][QS2]நீர் எங்களை மன்னிக்கவில்லை. [QE][PBR]
43. [QS]“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; [QE][QS2]இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர். [QE]
44. [QS]மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், [QE][QS2]மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது. [QE]
45. [QS]நீர் எங்களை நாடுகளுக்குள் [QE][QS2]குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர். [QE][PBR]
46. [QS]“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து [QE][QS2]எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். [QE]
47. [QS]எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், [QE][QS2]பாழும் அழிவும் வந்தன.” [QE]
48. [QS]என் மக்கள் அழிக்கப்பட்டதனால் [QE][QS2]என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது. [QE][PBR]
49. [QS]என் கண்கள் ஓய்வின்றி, [QE][QS2]கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். [QE]
50. [QS]பரலோகத்திலிருந்து யெகோவா [QE][QS2]கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும். [QE]
51. [QS]என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், [QE][QS2]என் ஆத்துமா துக்கிக்கிறது. [QE][PBR]
52. [QS]காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், [QE][QS2]என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள். [QE]
53. [QS]அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, [QE][QS2]குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்; [QE]
54. [QS]வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. [QE][QS2]நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன். [QE][PBR]
55. [QS]யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, [QE][QS2]உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். [QE]
56. [QS]“ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” [QE][QS2]என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர். [QE]
57. [QS]நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, [QE][QS2]“நீ பயப்படாதே” என்றீர். [QE][PBR]
58. [QS]யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; [QE][QS2]என் உயிரை மீட்டுக்கொண்டீர். [QE]
59. [QS]யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். [QE][QS2]நீர் எனக்காக வாதாடும்! [QE]
60. [QS]அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், [QE][QS2]அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர். [QE][PBR]
61. [QS]யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், [QE][QS2]எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்; [QE]
62. [QS]அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, [QE][QS2]எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள். [QE]
63. [QS]அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், [QE][QS2]அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள். [QE][PBR]
64. [QS]யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். [QE][QS2]அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும். [QE]
65. [QS]அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், [QE][QS2]உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். [QE]
66. [QS]கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, [QE][QS2]யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும். [QE][PBR] [PBR]