1. [QS][* இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. ] யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் [QE][QS2]சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; [QE][QS]இஸ்ரயேலின் சீர்சிறப்பை [QE][QS2]வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; [QE][QS]அவர் தமது கோபத்தின் நாளில் [QE][QS2]தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை. [QE][PBR]
2. [QS]யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் [QE][QS2]யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; [QE][QS]யூதா மகளின் கோட்டைகளை [QE][QS2]தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். [QE][QS]அரசுகளையும், அதன் இளவரசர்களையும் [QE][QS2]அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார். [QE][PBR]
3. [QS]அவருடைய கோபத்தினால் [QE][QS2]இஸ்ரயேலின் முழு பலத்தையும்[† மூல மொழியில் கொம்பு என எழுதப்பட்டுள்ளது. ] இல்லாமல் பண்ணினார். [QE][QS]அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். [QE][QS2]அவர் யாக்கோபின் நாட்டில், [QE][QS]தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, [QE][QS2]கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார். [QE][PBR]
4. [QS]அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; [QE][QS2]அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. [QE][QS]அவர் பகைவனைப்போல [QE][QS2]கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; [QE][QS]சீயோன் மகளின் கூடாரத்தில் [QE][QS2]தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார். [QE][PBR]
5. [QS]ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; [QE][QS2]அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; [QE][QS]அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, [QE][QS2]அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். [QE][QS]யூதாவின் மகளுக்கு புலம்பலையும், [QE][QS2]துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார். [QE][PBR]
6. [QS]அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; [QE][QS2]அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார். [QE][QS]யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும், [QE][QS2]ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்; [QE][QS]தமது கடுங்கோபத்தில் அரசனையும், [QE][QS2]ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார். [QE][PBR]
7. [QS]யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து, [QE][QS2]தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார். [QE][QS]அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை [QE][QS2]பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; [QE][QS]அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல் [QE][QS2]யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள். [QE][PBR]
8. [QS]யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை [QE][QS2]அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார். [QE][QS]அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார். [QE][QS2]அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை. [QE][QS]அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்; [QE][QS2]அவை ஒன்றாக பாழாய்ப்போயின. [QE][PBR]
9. [QS]எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; [QE][QS2]அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார். [QE][QS]அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும் [QE][QS2]நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். [QE][QS2]சட்டம் இல்லாமற்போயிற்று. [QE][QS]அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு [QE][QS2]யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை. [QE][PBR]
10. [QS]சீயோன் மகளின் முதியோர் [QE][QS2]மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; [QE][QS]அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு, [QE][QS2]துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள். [QE][QS]எருசலேமின் இளம்பெண்கள் [QE][QS2]தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள். [QE][PBR]
11. [QS]அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. [QE][QS2]நான் எனக்குள் வேதனையடைகிறேன். [QE][QS]என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது. [QE][QS2]ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். [QE][QS]பிள்ளைகளும் குழந்தைகளும் [QE][QS2]பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள். [QE][PBR]
12. [QS]அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், [QE][QS2]பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள். [QE][QS]அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம், [QE][QS2]“அப்பமும், பானமும் எங்கே?” [QE][QS]எனக்கேட்டு தாயாரின் கைகளில் [QE][QS2]உயிரை விடுகிறார்கள். [QE][PBR]
13. [QS]எருசலேம் மகளே! [QE][QS2]உனக்கு என்ன சொல்வேன்? [QE][QS2]உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்? [QE][QS]சீயோன் கன்னி மகளே, [QE][QS2]நான் உன்னைத் தேற்றும்படி [QE][QS2]எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்? [QE][QS]உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே. [QE][QS2]யார் உன்னைக் குணமாக்க முடியும்? [QE][PBR]
14. [QS]உனது இறைவாக்கு உரைப்போரின் [QE][QS2]தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே; [QE][QS]உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி, [QE][QS2]அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை. [QE][QS]அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும், [QE][QS2]வழிதவறச் செய்வதுமே. [QE][PBR]
15. [QS]உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், [QE][QS2]உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; [QE][QS]எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் [QE][QS2]கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: [QE][QS]“அழகின் நிறைவு என்றும், [QE][QS2]பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் [QE][QS2]அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?” [QE][PBR]
16. [QS]உன் பகைவர்கள் எல்லோரும், [QE][QS2]உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்; [QE][QS]அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது: [QE][QS2]“நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம். [QE][QS]இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். [QE][QS2]அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.” [QE][PBR]
17. [QS]யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; [QE][QS2]அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை, [QE][QS2]நிறைவேற்றிவிட்டார். [QE][QS]எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார், [QE][QS2]பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார். [QE][QS2]அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார். [QE][PBR]
18. [QS]மக்களின் இருதயங்கள் [QE][QS2]ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன. [QE][QS]சீயோன் மகளின் மதிலே, [QE][QS2]உனது கண்ணீர் இரவும் பகலும் [QE][QS2]ஒரு நதியைப்போல் ஓடட்டும்; [QE][QS]உனக்கு ஓய்வு கொடாதே, [QE][QS2]கண்ணீர்விடாமல் இருக்காதே. [QE][PBR]
19. [QS]எழும்பு, இரவிலே [QE][QS2]முதற்சாமத்தில் கதறி அழு, [QE][QS]யெகோவாவினுடைய சமுகத்தில் [QE][QS2]உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று. [QE][QS]ஒவ்வொரு தெருவின் முனையிலும், [QE][QS2]பசியினால் மயங்கி விழும் [QE][QS]உனது பிள்ளைகளின் உயிருக்காக [QE][QS2]அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து. [QE][PBR]
20. [QS]“யெகோவாவே, கவனித்துப் பாரும்: [QE][QS2]நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ? [QE][QS]பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ? [QE][QS2]தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ? [QE][QS]ஆண்டவரின் பரிசுத்த இடத்தில் [QE][QS2]ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ? [QE][PBR]
21. [QS]“வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின் [QE][QS2]புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்; [QE][QS]வாலிபரும், கன்னிப்பெண்களும் [QE][QS2]வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். [QE][QS]உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்; [QE][QS2]இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர். [QE][PBR]
22. [QS]“ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல, [QE][QS2]திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர். [QE][QS]யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை, [QE][QS2]பிழைக்கவுமில்லை; [QE][QS]நான் பராமரித்து வளர்த்தவர்களை, [QE][QS2]என் பகைவன் அழித்துவிட்டான்.” [QE][PBR] [PBR]