1. [NBS]யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.
2. அவன் சொன்னதாவது: [NBE][QS]“என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், [QE][QS2]நீர் எனக்குப் பதிலளித்தீர்; [QE][QS]பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், [QE][QS2]நீர் எனது அழுகையைக் கேட்டீர். [QE]
3. [QS]நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், [QE][QS2]நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், [QE][QS2]நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; [QE][QS]உமது அலைகளும், அலையின் நுரைகளும் [QE][QS2]என்மேல் புரண்டன. [QE]
4. [QS]‘உமது முன்னிலையிலிருந்து [QE][QS2]நான் துரத்தப்பட்டேன். [QE][QS]இருந்தாலும், நான் திரும்பவும் [QE][QS2]உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன். [QE]
5. [QS]என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, [QE][QS2]ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; [QE][QS2]கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. [QE]
6. [QS]மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், [QE][QS2]கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. [QE][QS]ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர். [QE][PBR]
7. [QS]“யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் [QE][QS2]நான் உம்மையே நினைத்தேன், [QE][QS]என் மன்றாட்டு மேலெழுந்து [QE][QS2]உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது. [QE][PBR]
8. [QS]“சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள். [QE]
9. [QS]ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே [QE][QS2]உமக்குப் பலியிடுவேன். [QE][QS]நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். [QE][QS2]‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான். [QE]
10. [PS]யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது. [PE]