1. பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை:
2. {வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு} [PS] முதியோரே, இதைக் கேளுங்கள்; [QBR2] நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள். [QBR] உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ, [QBR2] இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ? [QBR]
3. இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; [QBR2] உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும், [QBR2] அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும். [QBR]
4. பச்சைப்புழு விட்டதை, [QBR2] இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; [QBR] இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, [QBR2] துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; [QBR] துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, [QBR2] வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன.
5. குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; [QBR2] திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் [QBR] இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; [QBR2] ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. [QBR]
6. வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான [QBR2] வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. [QBR] அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; [QBR2] பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. [QBR]
7. அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, [QBR2] என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. [QBR] அது அவற்றின் பட்டைகளை [QBR2] உரித்து எறிந்தது, [QBR2] அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது.
8. தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி [QBR2] அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். [QBR]
9. தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் [QBR2] யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. [QBR] யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் [QBR2] புலம்பி அழுகிறார்கள். [QBR]
10. வயல்வெளிகள் பாழாயின, [QBR2] நிலமும் உலர்ந்துபோயிற்று; [QBR] தானியம் அழிந்தது, [QBR2] புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; [QBR2] எண்ணெயும் குறைவுபடுகிறது.
11. விவசாயிகளே, கலங்குங்கள், [QBR2] திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; [QBR] கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; [QBR2] ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. [QBR]
12. திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, [QBR2] அத்திமரம் வாடிப்போயிற்று. [QBR] மாதுளையும், பேரீச்சையும், [QBR2] ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் [QBR] எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; [QBR2] மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று.
13. {மனந்திரும்புதலுக்கு அழைப்பு} [PS] ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; [QBR2] பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; [QBR] என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, [QBR2] வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். [QBR] ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து [QBR2] தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. [QBR]
14. பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; [QBR2] பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். [QBR] முதியோரையும், [QBR2] நாட்டில் வாழும் அனைவரையும் [QBR] உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, [QBR2] யெகோவாவை நோக்கிக் கதறுங்கள்.
15. அது எவ்வளவு பயங்கரமான நாள், [QBR2] யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; [QBR2] அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும்.
16. எங்கள் கண்களுக்கு முன்பாகவே [QBR2] உணவும், [QBR] நம் இறைவனின் ஆலயத்திலிருந்து [QBR2] மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ? [QBR]
17. மண்கட்டிகளின் அடியில் [QBR2] விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. [QBR] தானியம் அற்றுப்போனதால் [QBR2] பண்டகசாலைகள் பாழாகி, [QBR2] தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின. [QBR]
18. வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; [QBR2] மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி [QBR] கலங்குகின்றன; [QBR2] செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன.
19. யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், [QBR2] ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; [QBR2] வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன. [QBR]
20. காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; [QBR2] நீரோடைகள் வற்றிப்போய்விட்டன, [QBR2] வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது. [PE]