1. [PS]பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை: [PE][PBR]
2. {#1வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு } [QS]முதியோரே, இதைக் கேளுங்கள்; [QE][QS2]நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள். [QE][QS]உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ, [QE][QS2]இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ? [QE]
3. [QS]இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; [QE][QS2]உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும், [QE][QS2]அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும். [QE]
4. [QS]பச்சைப்புழு விட்டதை, [QE][QS2]இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; [QE][QS]இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, [QE][QS2]துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; [QE][QS]துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, [QE][QS2]வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன. [QE][PBR]
5. [QS]குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; [QE][QS2]திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் [QE][QS]இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; [QE][QS2]ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. [QE]
6. [QS]வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான [QE][QS2]வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. [QE][QS]அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; [QE][QS2]பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. [QE]
7. [QS]அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, [QE][QS2]என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. [QE][QS]அது அவற்றின் பட்டைகளை [QE][QS2]உரித்து எறிந்தது, [QE][QS2]அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது. [QE][PBR]
8. [QS]தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி [QE][QS2]அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். [QE]
9. [QS]தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் [QE][QS2]யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. [QE][QS]யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் [QE][QS2]புலம்பி அழுகிறார்கள். [QE]
10. [QS]வயல்வெளிகள் பாழாயின, [QE][QS2]நிலமும் உலர்ந்துபோயிற்று; [QE][QS]தானியம் அழிந்தது, [QE][QS2]புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; [QE][QS2]எண்ணெயும் குறைவுபடுகிறது. [QE][PBR]
11. [QS]விவசாயிகளே, கலங்குங்கள், [QE][QS2]திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; [QE][QS]கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; [QE][QS2]ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. [QE]
12. [QS]திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, [QE][QS2]அத்திமரம் வாடிப்போயிற்று. [QE][QS]மாதுளையும், பேரீச்சையும், [QE][QS2]ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் [QE][QS]எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; [QE][QS2]மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று. [QE]
13. {#1மனந்திரும்புதலுக்கு அழைப்பு } [QS]ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; [QE][QS2]பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; [QE][QS]என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, [QE][QS2]வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். [QE][QS]ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து [QE][QS2]தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. [QE]
14. [QS]பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; [QE][QS2]பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். [QE][QS]முதியோரையும், [QE][QS2]நாட்டில் வாழும் அனைவரையும் [QE][QS]உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, [QE][QS2]யெகோவாவை நோக்கிக் கதறுங்கள். [QE][PBR]
15. [QS]அது எவ்வளவு பயங்கரமான நாள், [QE][QS2]யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; [QE][QS2]அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும். [QE][PBR]
16. [QS]எங்கள் கண்களுக்கு முன்பாகவே [QE][QS2]உணவும், [QE][QS]நம் இறைவனின் ஆலயத்திலிருந்து [QE][QS2]மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ? [QE]
17. [QS]மண்கட்டிகளின் அடியில் [QE][QS2]விதைகள் காய்ந்து போயிருக்கின்றன. [QE][QS]தானியம் அற்றுப்போனதால் [QE][QS2]பண்டகசாலைகள் பாழாகி, [QE][QS2]தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின. [QE]
18. [QS]வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; [QE][QS2]மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி [QE][QS]கலங்குகின்றன; [QE][QS2]செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன. [QE][PBR]
19. [QS]யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், [QE][QS2]ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; [QE][QS2]வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன. [QE]
20. [QS]காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; [QE][QS2]நீரோடைகள் வற்றிப்போய்விட்டன, [QE][QS2]வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது. [QE]