1. {யோபு பேசுதல்} [PS] அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். [QBR2] மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்? [QBR]
3. இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், [QBR2] அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது. [QBR]
4. இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். [QBR2] அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்? [QBR]
5. அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; [QBR2] அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார். [QBR]
6. அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், [QBR2] இடத்திலிருந்து அசையவைக்கிறார். [QBR]
7. அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; [QBR2] நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார். [QBR]
8. அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, [QBR2] கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார். [QBR]
9. சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், [QBR2] தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே. [QBR]
10. அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் [QBR2] அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார். [QBR]
11. அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; [QBR2] அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது. [QBR]
12. அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? [QBR2] ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்? [QBR]
13. இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; [QBR2] ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் [QBR2] அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
14. “இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? [QBR2] அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்? [QBR]
15. நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; [QBR2] எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும். [QBR]
16. அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், [QBR2] என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை. [QBR]
17. அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; [QBR2] காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார். [QBR]
18. அவர் என்னைத் திரும்பவும் [QBR2] மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார். [QBR]
19. பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். [QBR2] நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்? [QBR]
20. நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; [QBR2] நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
21. “நான் குற்றமற்றவன், [QBR2] என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; [QBR2] என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன். [QBR]
22. எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், [QBR2] ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’ [QBR]
23. வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, [QBR2] அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார். [QBR]
24. நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, [QBR2] அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். [QBR2] அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
25. “எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; [QBR2] அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன. [QBR]
26. நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், [QBR2] தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன. [QBR]
27. ‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ [QBR2] என்று சொன்னாலும், [QBR]
28. நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; [QBR2] நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன். [QBR]
29. நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, [QBR2] ஏன் வீணாய் போராட வேண்டும்? [QBR]
30. நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், [QBR2] என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும், [QBR]
31. நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். [QBR2] அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
32. “நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் [QBR2] அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல. [QBR]
33. எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், [QBR2] எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து, [QBR]
34. என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற [QBR2] ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; [QBR2] அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது. [QBR]
35. நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், [QBR2] ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது. [PE]