1. {#1யோபு பேசுதல் } [PS]அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது: [PE]
2. [QS]“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். [QE][QS2]மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்? [QE]
3. [QS]இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், [QE][QS2]அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது. [QE]
4. [QS]இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். [QE][QS2]அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்? [QE]
5. [QS]அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; [QE][QS2]அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார். [QE]
6. [QS]அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், [QE][QS2]இடத்திலிருந்து அசையவைக்கிறார். [QE]
7. [QS]அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; [QE][QS2]நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார். [QE]
8. [QS]அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, [QE][QS2]கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார். [QE]
9. [QS]சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், [QE][QS2]தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே. [QE]
10. [QS]அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் [QE][QS2]அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார். [QE]
11. [QS]அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; [QE][QS2]அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது. [QE]
12. [QS]அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? [QE][QS2]‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்? [QE]
13. [QS]இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; [QE][QS2]ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் [QE][QS2]அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர். [QE][PBR]
14. [QS]“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? [QE][QS2]அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்? [QE]
15. [QS]நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; [QE][QS2]எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும். [QE]
16. [QS]அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், [QE][QS2]என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை. [QE]
17. [QS]அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; [QE][QS2]காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார். [QE]
18. [QS]அவர் என்னைத் திரும்பவும் [QE][QS2]மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார். [QE]
19. [QS]பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். [QE][QS2]நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்? [QE]
20. [QS]நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; [QE][QS2]நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும். [QE][PBR]
21. [QS]“நான் குற்றமற்றவன், [QE][QS2]என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; [QE][QS2]என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன். [QE]
22. [QS]எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், [QE][QS2]‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’ [QE]
23. [QS]வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, [QE][QS2]அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார். [QE]
24. [QS]நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, [QE][QS2]அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். [QE][QS2]அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்? [QE][PBR]
25. [QS]“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; [QE][QS2]அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன. [QE]
26. [QS]நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், [QE][QS2]தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன. [QE]
27. [QS]‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ [QE][QS2]என்று சொன்னாலும், [QE]
28. [QS]நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; [QE][QS2]நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன். [QE]
29. [QS]நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, [QE][QS2]ஏன் வீணாய் போராட வேண்டும்? [QE]
30. [QS]நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், [QE][QS2]என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும், [QE]
31. [QS]நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். [QE][QS2]அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும். [QE][PBR]
32. [QS]“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் [QE][QS2]அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல. [QE]
33. [QS]எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், [QE][QS2]எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து, [QE]
34. [QS]என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற [QE][QS2]ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; [QE][QS2]அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது. [QE]
35. [QS]நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், [QE][QS2]ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது. [QE][PBR]