1. {#1பில்தாத் பேசுதல் } [PS]அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: [PE]
2. [QS]“நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்? [QE][QS2]உன் வார்த்தைகள் சீற்றமாய் வீசும் காற்றைப்போல் இருக்கின்றன. [QE]
3. [QS]இறைவன் நீதியைப் புரட்டுவாரோ? [QE][QS2]எல்லாம் வல்லவர் நியாயத்தைப் புரட்டுவாரோ? [QE]
4. [QS]உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது, [QE][QS2]அவர்களின் பாவத்தின் தண்டனைக்கு அவர்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார். [QE]
5. [QS]நீ இறைவனை நோக்கிப்பார்த்து, [QE][QS2]எல்லாம் வல்லவரிடம் மன்றாடுவாயானால், [QE]
6. [QS]நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால், [QE][QS2]இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து, [QE][QS2]உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார். [QE]
7. [QS]உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும், [QE][QS2]உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும். [QE][PBR]
8. [QS]“முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து, [QE][QS2]அவர்கள் முற்பிதாக்கள் கற்றுக்கொண்டதைக் கேட்டுப்பார். [QE]
9. [QS]நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்; [QE][QS2]பூமியில் நமது நாட்கள் நிழலாய்த்தான் இருக்கின்றன. [QE]
10. [QS]அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா? [QE][QS2]அவர்கள் தாங்கள் விளங்கிக்கொண்டதிலிருந்து உனக்கு விளக்கமளிக்கமாட்டார்களா? [QE]
11. [QS]சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? [QE][QS2]தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? [QE]
12. [QS]அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும், [QE][QS2]மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன. [QE]
13. [QS]இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்; [QE][QS2]இறைவனை மறுதலிப்போரின் நம்பிக்கையும் அப்படியே அழிந்துபோகும். [QE]
14. [QS]அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை; [QE][QS2]அவன் சிலந்தி வலைகளிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். [QE]
15. [QS]அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்; [QE][QS2]அவன் அதைப் பிடித்துத் தொங்கினாலும் அது அவனைத் தாங்காது. [QE]
16. [QS]அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்; [QE][QS2]அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து, [QE]
17. [QS]தன் வேர்களினால் [QE][QS2]கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது. [QE]
18. [QS]அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது [QE][QS2]அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும். [QE]
19. [QS]அதின் உயிர் வாடிப்போகிறது, [QE][QS2]அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன. [QE][PBR]
20. [QS]“இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்; [QE][QS2]தீமை செய்பவர்களின் கைகளைப் பலப்படுத்தவும் மாட்டார். [QE]
21. [QS]அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும், [QE][QS2]உன் உதடுகளை மகிழ்ச்சியின் சத்தத்தினாலும் நிரப்புவார். [QE]
22. [QS]உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள், [QE][QS2]கொடியவர்களின் கூடாரங்கள் இல்லாதொழிந்து போகும்.” [QE]