1. {பில்தாத் பேசுதல்} [PS] அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: [QBR]
2. “நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்? [QBR2] உன் வார்த்தைகள் சீற்றமாய் வீசும் காற்றைப்போல் இருக்கின்றன. [QBR]
3. இறைவன் நீதியைப் புரட்டுவாரோ? [QBR2] எல்லாம் வல்லவர் நியாயத்தைப் புரட்டுவாரோ? [QBR]
4. உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது, [QBR2] அவர்களின் பாவத்தின் தண்டனைக்கு அவர்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார். [QBR]
5. நீ இறைவனை நோக்கிப்பார்த்து, [QBR2] எல்லாம் வல்லவரிடம் மன்றாடுவாயானால், [QBR]
6. நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால், [QBR2] இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து, [QBR2] உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார். [QBR]
7. உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும், [QBR2] உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும்.
8. “முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து, [QBR2] அவர்கள் முற்பிதாக்கள் கற்றுக்கொண்டதைக் கேட்டுப்பார். [QBR]
9. நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்; [QBR2] பூமியில் நமது நாட்கள் நிழலாய்த்தான் இருக்கின்றன. [QBR]
10. அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா? [QBR2] அவர்கள் தாங்கள் விளங்கிக்கொண்டதிலிருந்து உனக்கு விளக்கமளிக்கமாட்டார்களா? [QBR]
11. சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? [QBR2] தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? [QBR]
12. அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும், [QBR2] மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன. [QBR]
13. இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்; [QBR2] இறைவனை மறுதலிப்போரின் நம்பிக்கையும் அப்படியே அழிந்துபோகும். [QBR]
14. அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை; [QBR2] அவன் சிலந்தி வலைகளிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். [QBR]
15. அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்; [QBR2] அவன் அதைப் பிடித்துத் தொங்கினாலும் அது அவனைத் தாங்காது. [QBR]
16. அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்; [QBR2] அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து, [QBR]
17. தன் வேர்களினால் [QBR2] கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது. [QBR]
18. அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது [QBR2] அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும். [QBR]
19. அதின் உயிர் வாடிப்போகிறது, [QBR2] அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன.
20. “இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்; [QBR2] தீமை செய்பவர்களின் கைகளைப் பலப்படுத்தவும் மாட்டார். [QBR]
21. அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும், [QBR2] உன் உதடுகளை மகிழ்ச்சியின் சத்தத்தினாலும் நிரப்புவார். [QBR]
22. உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள், [QBR2] கொடியவர்களின் கூடாரங்கள் இல்லாதொழிந்து போகும்.” [PE]