1. [QS]“பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே? [QE][QS2]அவனுடைய நாட்கள் கூலிக்காரனின் நாட்களைப் போன்றதல்லவா? [QE]
2. [QS]ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும், [QE][QS2]கூலியாள் தன் கூலிக்காக காத்திருப்பது போலவும், [QE]
3. [QS]பயனற்ற மாதங்களும், [QE][QS2]துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன. [QE]
4. [QS]நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்; [QE][QS2]இரவு நீண்டுகொண்டே போகிறது, நானோ விடியும்வரை புரண்டு கொண்டிருக்கிறேன். [QE]
5. [QS]என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது, [QE][QS2]எனது தோல் வெடித்துச் சீழ்வடிகிறது. [QE][PBR]
6. [QS]“நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன; [QE][QS2]அவை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலேயே முடிவடைகின்றன. [QE]
7. [QS]என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்; [QE][QS2]என் கண்கள் இனி ஒருபோதும் சந்தோஷத்தைக் காண்பதில்லை. [QE]
8. [QS]இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை; [QE][QS2]நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன். [QE]
9. [QS]மேகம் கலைந்து போவதுபோல், [QE][QS2]பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. [QE]
10. [QS]அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், [QE][QS2]அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை. [QE][PBR]
11. [QS]“ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்; [QE][QS2]எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன், [QE][QS2]எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன். [QE]
12. [QS]நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா? [QE][QS2]அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா? [QE]
13. [QS]என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், [QE][QS2]என் படுக்கையில் எனக்கு அமைதி கிடைக்கும் என்றும் நான் நினைத்தாலும், [QE]
14. [QS]நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி, [QE][QS2]தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர். [QE]
15. [QS]இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும், [QE][QS2]குரல்வளை நெரிக்கப்பட்டு சாவதை விரும்புகிறேன். [QE]
16. [QS]நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்; [QE][QS2]என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை, [QE][QS2]என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை. [QE][PBR]
17. [QS]“நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும், [QE][QS2]அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும், [QE]
18. [QS]காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், [QE][QS2]ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்? [QE]
19. [QS]நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ? [QE][QS2]ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ? [QE]
20. [QS]மானிடரைக் காப்பவரே, [QE][QS2]நான் பாவம் செய்திருந்தால், உமக்கெதிராய் நான் செய்தது என்ன? [QE][QS]நீர் என்னை உமது இலக்காக வைத்திருப்பது ஏன்? [QE][QS2]நான் உமக்குச் சுமையாகிவிட்டேனா? [QE]
21. [QS]நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை? [QE][QS2]என் பாவங்களை ஏன் மன்னிக்கவில்லை? [QE][QS]இப்பொழுதே நான் இறந்து தூசியில் போடப்படுவேன். [QE][QS2]நீர் என்னைத் தேடும்போது, நான் இருக்கமாட்டேன்.” [QE]