1. “பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே? [QBR2] அவனுடைய நாட்கள் கூலிக்காரனின் நாட்களைப் போன்றதல்லவா? [QBR]
2. ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும், [QBR2] கூலியாள் தன் கூலிக்காக காத்திருப்பது போலவும், [QBR]
3. பயனற்ற மாதங்களும், [QBR2] துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன. [QBR]
4. நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்; [QBR2] இரவு நீண்டுகொண்டே போகிறது, நானோ விடியும்வரை புரண்டு கொண்டிருக்கிறேன். [QBR]
5. என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது, [QBR2] எனது தோல் வெடித்துச் சீழ்வடிகிறது.
6. “நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன; [QBR2] அவை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலேயே முடிவடைகின்றன. [QBR]
7. என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்; [QBR2] என் கண்கள் இனி ஒருபோதும் சந்தோஷத்தைக் காண்பதில்லை. [QBR]
8. இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை; [QBR2] நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன். [QBR]
9. மேகம் கலைந்து போவதுபோல், [QBR2] பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. [QBR]
10. அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், [QBR2] அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை.
11. “ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்; [QBR2] எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன், [QBR2] எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன். [QBR]
12. நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா? [QBR2] அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா? [QBR]
13. என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், [QBR2] என் படுக்கையில் எனக்கு அமைதி கிடைக்கும் என்றும் நான் நினைத்தாலும், [QBR]
14. நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி, [QBR2] தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர். [QBR]
15. இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும், [QBR2] குரல்வளை நெரிக்கப்பட்டு சாவதை விரும்புகிறேன். [QBR]
16. நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்; [QBR2] என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை, [QBR2] என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை.
17. “நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும், [QBR2] அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும், [QBR]
18. காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், [QBR2] ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்? [QBR]
19. நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ? [QBR2] ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ? [QBR]
20. மானிடரைக் காப்பவரே, [QBR2] நான் பாவம் செய்திருந்தால், உமக்கெதிராய் நான் செய்தது என்ன? [QBR] நீர் என்னை உமது இலக்காக வைத்திருப்பது ஏன்? [QBR2] நான் உமக்குச் சுமையாகிவிட்டேனா? [QBR]
21. நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை? [QBR2] என் பாவங்களை ஏன் மன்னிக்கவில்லை? [QBR] இப்பொழுதே நான் இறந்து தூசியில் போடப்படுவேன். [QBR2] நீர் என்னைத் தேடும்போது, நான் இருக்கமாட்டேன்.” [PE]