1. {#1யோபு பதிலளித்தல் } [PS]யோபு மறுமொழியாக சொன்னது: [PE]
2. [QS]“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு [QE][QS2]நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்! [QE]
3. [QS]அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; [QE][QS2]ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே. [QE]
4. [QS]எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, [QE][QS2]என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது; [QE][QS2]இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன. [QE]
5. [QS]தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? [QE][QS2]தீனி இருக்கும்போது எருது கதறுமோ? [QE]
6. [QS]சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? [QE][QS2]முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ? [QE]
7. [QS]இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; [QE][QS2]நான் அதைத் தொட மறுக்கிறேன். [QE][PBR]
8. [QS]“நான் வேண்டிக்கொள்வதையும், [QE][QS2]நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும். [QE]
9. [QS]இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், [QE][QS2]தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்! [QE]
10. [QS]இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; [QE][QS2]எனது முடிவில்லாத வேதனையிலும் [QE][QS2]பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை. [QE][PBR]
11. [QS]“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? [QE][QS2]நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன? [QE]
12. [QS]ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? [QE][QS2]எனது சதை வெண்கலமோ? [QE]
13. [QS]எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? [QE][QS2]வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று. [QE][PBR]
14. [QS]“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய [QE][QS2]பயத்தைக் கைவிட்ட போதிலும், [QE][QS2]அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும். [QE]
15. [QS]ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் [QE][QS2]பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள். [QE]
16. [QS]அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், [QE][QS2]அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும். [QE]
17. [QS]ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, [QE][QS2]வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன. [QE]
18. [QS]வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி; [QE][QS2]பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன. [QE]
19. [QS]தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும் [QE][QS2]தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். [QE]
20. [QS]அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்; [QE][QS2]அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள். [QE]
21. [QS]இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்; [QE][QS2]என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். [QE]
22. [QS]நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ, [QE][QS2]உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ, [QE]
23. [QS]என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ, [QE][QS2]கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா? [QE][PBR]
24. [QS]“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்; [QE][QS2]நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள். [QE]
25. [QS]நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன! [QE][QS2]ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன? [QE]
26. [QS]நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ? [QE][QS2]மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ? [QE]
27. [QS]அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; [QE][QS2]உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள். [QE][PBR]
28. [QS]“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள். [QE][QS2]உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா? [QE]
29. [QS]போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; [QE][QS2]பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது. [QE]
30. [QS]என் உதடுகளில் அநீதி உண்டோ? [QE][QS2]என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ? [QE][PBR]